சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், [[இலங்கை]]யில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "[[சிலோன் கசற்றியர்]]" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், [[இலண்டன்|இலண்டனி]]லும் கூடப் புகழ் பெற்றார். இவர் [[உதயாதித்தன்]] என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார்.
 
இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "[[தமிழ் புளூட்டாக்]]" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
 
[[மாலைத்தீவுகள்|மாலைத்தீவு]] மொழியிலே [[சிங்களம்|சிங்கள மொழி]] கலந்துள்ளமை பற்றியும் [[ஜாவாத்தீவு|ஜாவாத்தீவின்]] மொழிக்கும் [[சமஸ்கிருத மொழி|சமஸ்கிருத மொழிக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது