வண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{dablink|இதே பெயரிலுள்ள தமிழர் துணைக்கருவி பற்றி அறிய [[வண்டு (உபகரணம்)]] கட்டுரையைப் பார்க்க.}}
 
[[படிமம்:Dorcus_parallelipipedus02Dorcus parallelipipedus MHNT mâle L'espicié.jpg|thumb|300px|right|[[இந்தியா]]வில் காணப்படும் ஒரு வகையான கருவண்டு (தோர்க்கசு பாரலெல்லிப்பைப்பிடெசு (''Dorcus_parallelipipedus'') என்னும் வகை) ]]
 
'''வண்டு''' என்பது ஆறு கால்கள் கொண்ட ஒரு பறக்கும் [[பூச்சி]]யினம். இவற்றிற்கு, முன் [[இறக்கை]]கள் இரண்டும் பின் இறக்கைகள் இரண்டும் ஆக நான்கு இறக்கைகள் உண்டு. முன்னால் தலைப்பகுதியில் இரண்டு உணர்விழைகள் உண்டு. வண்டுகளின் முன் இறக்கைகள் கெட்டியானவை, பின் இறக்கைகள்தான் பறக்கப் பயன்படும் மென்மையான படலத்தால் ஆனவை. முன் இறக்கைகள் வண்டு பறக்காமல் இருக்கும் பொழுது பறக்கப் பயன்படும் மெல்லிய பின் இறக்கைகளை மூடிக் காக்கும் உறை போல பயன்படுகின்றது. இந்த முன் இறக்கைகளுக்கு ''வன்சிறகு'' அல்லது ''காப்புச்சிறகு'' (''elytra'') என்று பெயர். இவை வளைந்து குமிழி போல இருக்கும். இப்படிக் வளைந்து குமிழி போல் இருப்பதால் இவற்றிற்கு ''வண்டு'' என்று பெயர் (வண்டு என்றால் வளைந்தது). உலகில் ஏறத்தாழ 350,000 வண்டினங்கள் உள்ளன. பூச்சி இனங்களிலேயே சற்றேறக்குறைய 40% வண்டுகள்தான் என உயிரியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். அவ்வப்பொழுது புதுப் புது வண்டினங்ளை அறிஞர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இன்றுவரை [[அறிவியல்]] முறைப்படி விளக்கப்பட்டவையும், இன்னும் விளக்கப்படாமலோ, கண்டறியப்படாமலோ உள்ள வண்டினங்களையும் சேர்த்து 5 முதல் 8 [[மில்லியன்]] வரை இருக்கும் என கருதுகின்றார்கள். வண்டினங்களின் அறிவியல் பெயர் '''கோலியாப்டெரா''' (''Coleoptera'') என்பதாகும். கோலியாப்டெரா என்னும் சொல் இரண்டு [[கிரேக்க மொழி|கிரேக்க மொழிச்]] சொற்களால் சேர்ந்த கூட்டுச்சொல். இதில் ''கோலியாஸ்'' (''koleos'') என்றால் காப்புறை என்று பொருள். ''ப்டெரா'' (ptera) என்றால் இறக்கைகள் என்று பொருள். எனவே வண்டுகளின் அறிவியல் பெயரானது ''காப்புறை இறகிகள்'' என்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது