"குயின் (இசைக்குழு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

809 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎top: *விரிவாக்கம்*)
 
 
நவம்பர் 24, 1991இல் பிரெஃடி மெர்குரி [[எய்ட்சு]]-தொடர்புள்ள நோயினால் இயற்கை எய்தினார்.<ref>http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/november/24/newsid_2546000/2546945.stm</ref> 1997இல் ஜான் டெக்கான் தமது குடும்பத்துடன் கூடுதல் நேரம் கழிக்க விரும்பி ஓய்வு பெற்றார். மற்ற இரு உறுப்பினர்களும் பவுல் இரோசர்சுடன் 2005இலிருந்து 2009 வரை உலகெங்கும் கச்சேரிகளை நடத்தி வந்தனர். இக்குழுவின் மிகப்பெரும் மூன்று பரவலான புகழ்பெற்ற இசைப்பாடல்களாக "வீ வில் ராக் யூ", "வீ ஆர் தி சாம்பியன்சு" மற்றும் "பொகீமியன் ராப்சோடி" விளங்கின.
{{Listen
|filename =QueenBohemianRhapsody Mama.ogg
|title ="பொகீமியன் ராப்சோடி"
|description= "பொகீமியன் ராப்சோடி" பாட்டின் மாதிரிச் சான்று. (1975). இது வெளியானபோது ஐக்கிய இராச்சியத்தில் ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முதலாமிடத்தில் இருந்தது; அனைத்துக் காலத்தும் மிக கூடுதலாக விற்கப்பட்ட பிரித்தானிய ஒற்றைப் பாட்டுக்களில் மூன்றாவதாக விளங்குகிறது.
}}
 
குயின் இசைக்குழு மொத்தம் தரவரிசைப் பட்டியலில் முதலாவதாக வந்த 18 இசைத்தொகுப்புகளையும் 18 தனிப்பாட்டுக்களையும் 10 இசைக் குறுவட்டுக்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது வட்டுகளின் சாதனை விற்பனை 150 மில்லியனிலிருந்து 300 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது; உலகின் மிகக் கூடுதலாக விற்பனையாகும் கலைக்குழுக்களில் ஒன்றாக இந்த இசைக்குழு விளங்குகிறது. பிரித்தானிய இசைத்தட்டுத் தொழில் வழங்கும் ''பிரித்தானிய இசைக்கு மிகச்சிறந்த பங்களிப்பிற்கான விருது'' 1990இல் இவர்களுக்கு வழங்கப்பட்டது. 2001இல் ராக் மற்றும் ரோல் இசை புகழ்மையத்தில் (Rock and Roll Hall of Fame) இடம் பெற்றனர்.<ref>http://news.bbc.co.uk/1/hi/entertainment/2339131.stm</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1721636" இருந்து மீள்விக்கப்பட்டது