இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
யாழ்ப்பாண அரசர் காலத்தில் இக்கோயிலை அண்டி ஒரு மடம் இருந்தது. கோயிலுக்கு வருபவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். யாழ்ப்பாணத்தைப் போத்துக்கேயர் கைப்பற்றியபின்னர் இராச்சியத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்தனர். அவ்வேளை இக் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை ஒழித்து வைத்த மக்கள் அக்கட்டிடத்தை ஒரு மடம் எனக்கூறியதால் அக்கட்டிடத்தைப் போத்துக்கேயர் இடிக்காமல் விட்டனர்.<ref>சிவலிங்கம், மூ., 2004. பக். 04.</ref>
 
போத்துக்கேயருக்குப் பின்னர் வந்த ஒல்லாந்தரும் தமது 138 ஆண்டுக்கால ஆட்சியில் [[சைவம்|சைவ]] வழிபாட்டுக்கு இடமளிக்கவில்லை. இறுதிக் காலத்தில் சில ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டபோது ஆங்காங்கே கோயில்களும் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலிலும் வழிபாடுகள் தொடங்கியிருக்கக்கூடும். ஆங்கிலேயர் 1796ல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் வழிபாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. 1800களில் பழைய கோயில் கட்டிடம் திருத்தப்பட்டுக் குடமுழுக்கும் இடம்பெற்றதாகத் தெரிகிறது. இக்காலத்தில், கருவறையுடன், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றையும் கொண்டிருந்த இக்கோயில் சிறியதாக இருந்தது. அக்காலப்பகுதியில் பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வந்ததுடன், [[திருவிழா]]க்களும் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.<ref>[http://www.inuvilinfo.com/index.php?mpageid=1 கோயில் இணையத்தளம்], வரலாறு. 15 நவ 2012ல் பார்க்கப்பட்டது.</ref>
 
1928 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திருத்த வேலைகளும், புதிய கட்டிடவேலைகளும் இடம்பெற்றன. 1939ல் குடமுழுக்கும் செய்யப்பட்டது. இதன் பின்னரும் பல தடவைகள் திருப்பணி வேலைகள் இடம்பெற்றுக் கோயில் விரிவாக்கப்பட்டது. தற்போது பல மண்டபங்கள், [[இராசகோபுரம்]], மணிமண்டபம் என்பவற்றைக் கொண்டதாக இக்கோயில் விளங்குகிறது.
 
==கடவுளர்==