மொலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
வசதி படைத்த குடும்பமொன்றில் பிறந்து [[இயேசுசபை]]யினரின் கிளெமண்ட் கல்லூரியில் படித்த மொலியர், [[அரங்கியல்|அரங்கியலில்]] ஈடுபடுவதற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். 13 ஆண்டுகள் பல்வேறிடங்களுக்கும் சென்று நடிப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததனால் இவரது நகைச்சுவைத் திறன் கூர்மையடைந்தது. திருந்திய பிரெஞ்சு நகைச்சுவையுடன், சமயத்துக்கு ஏற்றவாறு பேசி நடிக்கும் நுட்பத்தையும் கலந்து தானே நாடகங்களை எழுதவும் தொடங்கினார்.
 
==பாராட்டுகளும் எதிர்ப்புகளும்==
14 ஆம் லூயி உட்பட்ட சில உயர்மட்டத்தினரின் ஆதரவினால், அரசரின் முன் [[லூவர் மாளிகை]]யில் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அம்மாளிகையில் நாடகங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பெரிய அறையொன்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் இவருக்கு வழங்கப்பட்டது.
 
அரசவையிலும், பாரிஸ் நகர மக்கள் மத்தியிலும் இவருக்குப் பாராட்டுகள் கிடைத்தபோதும், ஒழுக்கவாதிகளும், [[திருச்சபை]]யினரும் இவரது கேலிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். ''தார்த்துஃபே அல்லது பாசாங்குக்காரன்'' என்னும் நாடகம் மதப் பாசாங்குத்தனத்தைச் சாடியதனால் இது திருச்சபையினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. ''டொன் யுவான்'' நாடகம் முற்றாகவே தடை செய்யப்பட்டது.

==இறுதி நாட்கள்==
நாடகத்துறையில் இவரது கடின உழைப்பு இவரது உடல் நலத்தைப் பாதித்தது. இதனால் 1667 அளவில் சிலகாலம் அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டியதாயிற்று. 1673 ஆம் ஆண்டில் தனது இறுதி நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தபோது [[காச நோய்]] வாய்ப்பட்டிருந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார் ஆயினும், பின்னர் மயக்கமுற்ற அவர் சில மணி நேரங்களின் பின் காலமானார்.
 
[[பகுப்பு:நாடகாசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மொலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது