கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 44:
13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர்.
 
16 ஆம் நூற்றாண்டில், [[ஐதராபாத்]] அருகே [[குதுப் ஷாஹி]] ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய் கோல்கொண்டா திகழ்ந்தது. இந்நகரம் செல்வம் கொழிக்கும் [[வைரம்|வைர]] வியாபாரத்திற்கும் மையமாய் திகழ்ந்தது.
[[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள [[ஐதராபாத்]] நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் கோல்கொண்டா அமைந்துள்ளது.
வரிசை 52:
இந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் பெரும் பாதுகாப்பு மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இக்கோட்டையின் துவக்க காலம் [[இந்து]] ககாதியா வம்சம் இந்த பகுதியில் ஆட்சி செய்த 1143 ஆம் ஆண்டு வரை பின்நோக்கி செல்கிறது. ககாதியா வம்சத்தை அடுத்து [[வாரங்கல்]] அரசு வந்தது. இது பின் இஸ்லாமிய பாமினி சுல்தான் வம்சத்தால் கைப்பற்றப்பட்டது. அந்த வம்சம் வீழ்ச்சி கண்ட பிறகு குதுப் ஷாஹி அரசர்களின் தலைநகரமாக ஆனது. முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீபின் முற்றுகைக்கு ஆளாகி வீழ்ந்த பின் இந்த கோட்டை தகுந்த பராமரிப்பு இன்றி சிதையத் துவங்கியது.
 
பாமினி சுல்தான் ராச்சியம் வீழ்ந்த பின் 1507 ஆம் ஆண்டுவாக்கில் குதுப் ஷாஹி வம்சத்தின் இருப்பிடமாக கோல்கொண்டா சிறப்பு பெற்றது. சுமார் 62 ஆண்டுகளில் இந்த களிமண் [[கோட்டை]] முதல் மூன்று குதுப் ஷாஹி அரசர்களால் பெரும் கருங்கல் [[கோட்டை]]யாக விரிவாக்கப்பட்டது. சுமார் 5 கிமீ [[சுற்றளவு|சுற்றளவுக்கு]] இக்கோட்டை விரிந்திருந்தது. 1590 ஆம் ஆண்டு தலைநகரம் [[ஐதராபாத்]] நகரத்திற்கு மாற்றப்படும் வரை கோல்கொண்டா குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகராய் விளங்கியது. குதுப் ஷாஹி அரசர்கள் கோட்டையை விரிவாக்கியபோது எழுப்பிய 7 கிமீ தூர சுற்றுச்சுவருக்குள் நகரம் அமைந்திருந்தது. இச்சுவற்றால் கோட்டை மற்றும் நகரம் இரண்டும் பாதுகாக்கபட்டனபாதுகாக்கப்பட்டன. இந்தியாவில் ஷியா இஸ்லாமிற்கான ஒரு மையப் புள்ளியாக கோல்கொண்டா அரசு விளங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் ஷேக் ஜாஃபர் பின் கமால் அல்-தின் மற்றும் ஷேக் ஷலி அல்-கர்ஸாகனி ஆகிய இரண்டு [[பஹ்ரைன்]] குருமார்கள் கோல்கொண்டாவுக்கு<ref>Juan Cole, Sacred Space and Holy War, IB Tauris, 2007 p44</ref> குடிபெயர்ந்துகுடிபெயர்ந்தது இதற்கு சான்றாகும்.
 
1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]] கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான் ராச்சியம் நீடித்தது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கோல்கொண்டா_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது