"பெரியவாச்சான்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==இன்னல்==
இளமையிலிருந்தே இவர் [[கிருட்டிணன்|கண்ணன்]]மீது பற்று கொண்டிருந்தார். ஊர்மக்கள் இதனை விரும்பவில்லை. திருமணம் செய்து வைத்து இவரை மாற்ற முயன்றனர். முடியவில்லை. எனவே மூலும் பல இன்னல்கள் செய்தனர். இவற்றைத் தாங்கமுடியாமல் வடநாட்டுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார்.
 
==சிறப்பு==
யாத்திரை முடிந்து திரும்பும்போது திருவேங்கடத்தில் இவரைக் கண்டவர்கள் அழைத்துவந்து சிறப்பு செய்தனர். அங்கேயே சிறிது காலம் தங்கினார். பின்னர் தன் சொந்த ஊரை நோக்கி வந்தார். வழியில் பழுத்த வைணவர் தன் முன்னோர் பூசனை செய்துவந்த [[சாளக்கிராமம்|சாளக்கிராமத்தை]] இவருக்குத் தந்தார். அதை வைத்து இவர் பூசனை செய்துவந்தார். ஒருநாள் கொள்ளிடக் கரையில் வைத்துவிட்டு நீராடியபின் திரும்பிவந்து பார்த்தபோது அந்தக் கல் காணவில்லை. அதே நினைவில் பலநாள் வந்து தேடிவருகையில் ஒருநாள் அவ்விடத்தில் கண்ணனின் மூர்த்தி உரு ஒன்று இருக்கக் கண்டாராம். அதனைக் கொண்டுவந்து பின்னர் வழிபட்டுவந்தார். அப்போதும் ஊர்மக்கள் செய்த இன்னல்களைத் தாங்கமுடியாமல் [[திருவரங்கம்]] சென்றார். அங்கும் [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|அரங்கநாதனை]] நேரில் கண்டு வழிபட இயலவில்லை. இரவெல்லாம் அரங்கநாதன் நினைவாகவே பட்டினியாக இருந்தபோது அரங்கநாதன் ஒரு பெண் வடிவில் வந்து அவருக்குப் பாலும் பழமும் தந்தாராம். இதனைக் கண்ட அந்தணர்கள் இவரை அழைத்துச் சென்று அரங்கநாதனைக் கண்டு வழிபடச் செய்தனர். பின்னர் திருவரங்கத்திலேயே வாழ்ந்துவந்தார்.
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1724604" இருந்து மீள்விக்கப்பட்டது