புரூக்ளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 76:
இங்கு பல இன மக்கள் தனித்தனி பகுதிகளில் (என்கிளேவ்) குடியேறியுள்ளனர். இதனையொட்டியே புரூக்ளினின் குறிக்கோளுரையாக {{lang|nl|''Eendraght Maeckt Maght''}} (''ஒற்றுமையே வலிமை'') என உள்ளது. இக்குறிக்கோளுரை பரோவின் சின்னத்திலும் கொடிகளிலும் காணப்படுகிறது.<ref>Flags of the World, [http://fotw.vexillum.com/flags/us-ny-bk.html Brooklyn, New York (U.S.)]. Retrieved October 10, 2007.</ref> புரூக்ளினின் அலுவல்முறை நிறங்கள் நீலமும் பொன்வண்ணமும் ஆகும்.<ref>Borough of Brooklyn.[http://www.brooklyn-usa.org/Press/2002/apr16.htm blue and gold].</ref>
{{நியூயார்க் மாவட்டங்கள்}}
==புவியியல்==
புரூக்ளின் [[நீள் தீவு|நீள் தீவின்]] மேற்கு முனையில் அமைந்துள்ளது. இதனை [[மன்ஹாட்டன்|மேன்காட்டனிடமிருந்து]] [[கிழக்கு ஆறு]] பிரிக்கிறது. புரூக்ளினின் ஒரே நிலத் தொடர்பு [[குயின்சு]]டன் உள்ளது. மற்ற பக்கங்களில் நீரால் சூழப்பட்டுள்ளது.
 
== வரலாறு ==
புரூக்ளின் நெதர்லாந்திலுள்ள "புரெகெலன்" (Breukelen) என்ற நகரையொட்டி பெயரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் முதன்முதலாக டச்சு மக்களே குடியேறினர். அவர்களுக்கு முன்னதாக அங்கு வாழ்ந்திருந்த அமெரிக்க தொல்குடியினர் இப்பகுதியை ''லெனேப்'' என அழைத்தனர். ''புதிய நெதர்லாந்து'' குடியேற்றத்தை உருவாக்க முனைந்த டச்சுக்காரர்கள் 1634இல் இங்கு குடியேறினர்.
புரூக்ளின் தனி நகரமாக வளர்ந்திருந்த நிலையில் 1898இல் பெரிய நியூயார்க் நகரத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட கருத்து வாக்கெடுப்பின்படி நியூயார்க் நகரத்துடன் இணைந்தது. இன்று பல [[பண்பாடு]]களைக் கொண்ட பல்வேறு [[இனக் குழு]]க்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
==சிறப்புக் கூறுகள்==
இங்குள்ள [[புரூக்ளின் பாலம்]] மிகவும் புகழ்பெற்றது. புரூக்ளினையும் [[மன்ஹாட்டன்|மேன்காட்டனையும்]] இணைக்கும் இது கிழக்கு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இருபுறமும் நடைமேடையுடன் உள்ள இந்தப் பாலத்தில் மேன்காட்டன் மற்றும் புரூக்ளினின் அழகியத் தோற்றத்தைக் கண்டவாறே நடப்பதற்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். நியூயார்க் நகரத்தின் மிகப்பெரும் பாலம் புரூக்ளினையும் [[இசுட்டேட்டன் தீவு|இசுட்டேட்டன் தீவையும்]] இணைக்கிறது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/புரூக்ளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது