"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

இறுதியாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களால் தான் இந்திய அலுவல் மொழிகள் சட்டம் 1963ம் அதன் 1967ம் ஆண்டு சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டன. இந்தியக் குடியரசின் தற்போதைய ''காலவரையற்ற மெய்நிகர் இருமொழிக் கொள்கை'' (இந்தி மற்றும் ஆங்கிலம்) இப்போராட்டங்களால் தான் உருவானது.
==2014 ல் இந்தித் திணிப்பு==
===சமூக வலைத்தளங்களில்===
[[நரேந்திர மோடி]]யின் [[பாரதீய ஜனதாக் கட்சி]] ஆட்சியின் போது 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பான அறிக்கையில்,
{{quotation|பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது.}}
இந்த ஆணையை எதிர்த்து [[வைகோ]], ''இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும், மாநிலத்திலும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக் கேடாக முடியும்'' என அறிக்கை வெளியிட்டார்.<ref>http://news.vikatan.com/article.php?module=news&aid=29237</ref> [[கருணாநிதி]], ''அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளதாகவும், ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது'' என்றார்.<ref>http://news.vikatan.com/article.php?module=news&aid=29199&r_frm=news_related</ref>
 
===சமஸ்கிருத திணிப்பு===
ஜூலை 2014 மாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய(CBSE) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு(2014) சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாயாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் அந்த மொழியை கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றும்படி அறிவுறுத்தப்பட்டது.இந்த நிகழ்வினை தமிழ் மற்றும் திராவிட அமைப்புகள் எதிர்த்தன.
இதுகுறித்து தமிழக முதல்வரான அ.தி.மு.கவினை சார்ந்த சேர்ந்த ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கண்டனத்தை தெரிவித்தார்.
அதில்
 
{{quotation|தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் மிகவும் வளமான கலாச்சாரம் இருக்கிறது. தமிழ் மொழியை போற்றும் பல்வேறு பேரியக்கங்கள் தமிழகத்தில் இயங்கியிருக்கின்றன, இன்னும் செயல்படுகின்றன. எனவே, இங்கு கடைபிடிப்பது பொருத்தமாக இருக்காது.தமிழகத்தில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்..}}
 
என கேட்டுக்கொண்டார்<ref name="சமஸ்கிருத வாரம் ">{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6227957.ece | title=சமஸ்கிருத வாரம் | publisher=தி ஹிந்து | work=செய்தி ஊடகம் | accessdate=20 செப்டம்பர் 2014}}</ref> .
 
மேலும் ஆசிரியர் தினமான செப்டெம்பர் 5 ஐ "குரு உத்சவ்" என கொண்டாடும் படி அனைத்து பள்ளிகளுக்கும் நடுவண் அரசு ஆகஸ்ட்-2014 இல் சுற்றிக்கை அனுப்பியது.இதனை சமஸ்கிருத திணிப்பு என்று தமிழகத்தில் உள்ள திராவிட மற்றும் தமிழ் அமைப்புகள் கடுமையாக கண்டித்தது.<ref name="குரு உத்சவ் ">{{cite web | url=http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-says-no-to-Guru-Utsav-will-stick-to-Teachers-Day/articleshow/41623810.cms | title=குரு உத்சவ் | publisher=டைம்ஸ் ஒப் இந்தியா | work=செய்தி ஊடகம் | accessdate=20 செப்டம்பர் 2014}}</ref>
மேலும் தி.மு.கவின் மு.கருணாநிதி ஒரு திருமண விழாவில் கீழ் கண்டவாறு கூறினார்.
 
{{quotation|ஆசிரியர் தினம் என்பதை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தச் சொல்லை மாற்றி இன்றைக்கு வந்துள்ள மத்திய புதிய அரசு வெளியிட்டு ஆணை, இனிமேல் அனைத்துப் பள்ளிகளிலும் 'குரு உத்சவ்' என்றுதான் ஆசிரியர் தினத்தை அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
 
இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்தி விட்டு, அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழியால் தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.
 
ஆகவே தான் நாம் இந்தத் திருமணத்தை தமிழர் முறைப்படி நடத்திக் கொண்டாலுங்கூட, இந்தத் தமிழர் முறைகளுக்கு வேட்டு வைக்கின்ற அளவுக்கு மெல்ல மெல்ல ஆரியம் தமிழகத்திலே தன்னுடைய சித்து வேலைகளைத் தொடங்கி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.}}
 
இதுபோன்ற நிகழ்வுகள் சமஸ்கிருதம் மூலம் இந்தியை திணிப்பதாக தமிழக தலைவர்கள் கருதினர்.
 
===கல்லூரிகளில் இந்தி கட்டாயம்===
செப்டெம்பர் 2014 இல் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் நடுவண் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . அத்துறையின் சார்பு செயலாளர் குல்விந்தர் குமார் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையின் மூலமாக
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும் மேலும் பட்டப்படிப்புகளில் சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது.
<ref name="கல்லூரிகளில் இந்தி கட்டாயம்">{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/09/19034941/HindiStuffingInitiativeAgainstWill-defeatJayalalithaaReport.vpf | title=கல்லூரிகளில் இந்தி கட்டாயம் | publisher=தின தந்தி | work=ஊடகம் | accessdate=20 செப்டம்பர் 2014}}</ref>
இதற்கும் தமிழக முதலமைச்சர் மற்றும் பல்வேறு திராவிட,தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது.
 
கடுமையான எதிர்ப்புகள் காரணமாக அந்த அறிக்கையை நடுவண் அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் வேத பிரகாஷ் கூறியதாவது:–
 
{{quotation|ஆங்கிலத்துடன் இந்தியும் முதன்மை பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற முந்தைய சுற்றறிக்கை, கவனக்குறைவாக வெளியிடப்பட்டு விட்டது. எனவே, ‘இந்தி, கட்டாயம் அல்ல‘ என்ற புதிய சுற்றறிக்கையை வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 19 2014) வெளியிட பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்துள்ளது.எப்படி கற்பிப்பது, யார் கற்பிப்பது, என்ன கற்பிப்பது என்பதை முடிவு செய்வது அந்தந்த பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்.<ref name="கல்லூரிகளில் இந்தி கட்டாயம் வாபஸ் ">{{cite web | url=http://www.dailythanthi.com/News/India/2014/09/19043529/Chief-Minister-Jayalalithaa-antiecho-Circular-withdraws.vpf | title=கல்லூரிகளில் இந்தி கட்டாயம் வாபஸ் | publisher=தின தந்தி | work=ஊடகம் | accessdate=20 செப்டம்பர் 2014}}</ref>}}
 
==மேற்கோள்கள்==
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1726332" இருந்து மீள்விக்கப்பட்டது