இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
| map_caption =
}}
'''2014 மாகாணசபைத் தேர்தல்கள்''' (''2014 Provincial Council elections'') [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேற்கு]] மற்றும் [[தென் மாகாணம், இலங்கை|தெற்கு]] ஆகிய இரண்டு [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாண சபை]]களுக்கு 159 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 மார்ச் 29 இல் நடைபெற்றன. 5.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.<ref>[http://www.slelections.gov.lk/pdf/pce2014/mr2014/mr1E.pdf இலங்கைத் தேர்தல் திணைக்களம்]</ref> இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் இவ்விரண்டு மாகாண சபைகளும் 2014 சனவரி மாதத்தில் கலைக்கப்பட்டன. [[ஊவா மாகாணம்|ஊவா]] மாகாணத்திற்கான தேர்தல் [[ஊவா மாகாணசபைத் தேர்தல், 2014|2014 செப்டம்பர் 20 இல்]] நடத்தப்பட்டது. ஏனைய ஆறு சபைகளின் தேர்தல்கள் [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2012|2012]], [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|2013]] ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.
 
மத்தியில் ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] (ஐமசுக) எதிர்பார்த்தது போல [[தென் மாகாணம், இலங்கை|தெற்கு]], மற்றும் [[மேல் மாகாணம், இலங்கை|மேற்கு]] மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஆனாலும், மேல் மாகாணசபையில் ஐமசுக, மற்றும் [[ஐக்கிய தேசியக் கட்சி]] ஆகியவை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. சிறிய கட்சிகளான [[மக்கள் விடுதலை முன்னணி]], [[சனநாயகக் கட்சி (இலங்கை)|சனநாயகக் கட்சி]], [[ஜனநாயக மக்கள் முன்னணி]] ஆகியன தமது வாக்குகளை அதிகரித்திருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மாகாண_சபைத்_தேர்தல்கள்,_2014" இலிருந்து மீள்விக்கப்பட்டது