திராவிட இயக்க இதழ்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
சி LanguageTool: typo fix
வரிசை 1:
1916 இல் [[திராவிட இயக்கம்]] தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலம் வரை ஏராளமான '''திராவிட இயக்க இதழ்கள்''' வெளிவந்துள்ளன. ஆயினும், 1942 – 1962 வரையிலான காலகட்டத்தைத் திராவிட இயக்க இதழ்களின் பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இதழாசிரியர்களாக விளங்கினர். திராவிட இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இதழ்கள் 265 க்கும் மேற்பட்டவை எனத்மேற்பட்டவையெனத் திராவிட இயக்க ஆய்வாளர்கள் [[க. திருநாவுக்கரசு]], [[ப. புகழேந்தி]] ஆகிய இருவரும் குறிப்பிடுகின்றனர். அவை திராவிட இயக்கத்தையும் அக்காலத்திய தமிழகத்தையும், அதனூடே தமிழக அரசியலையும் நன்கு விளங்கிக்கொள்ள துணை நிற்கின்றன. திராவிட இயக்க வளர்ச்சிக்கு இவ்விதழ்கள் முக்கிய பங்காற்றின. இவ்விதழ்களே திராவிட இயக்கத் தலைவர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கின. திராவிட இயக்க இதழ்களுள் குறிப்பிடத்தக்கவை பின்வருவன:
==திராவிடன்==
வரிசை 14:
==முரசொலி==
{{main|முரசொலி}}
[[மு. கருணாநிதி]]யால் 1942 இல் பொங்கல் நாளன்று ”[[முரசொலி]]” ஏடு [[திருவாரூர்|திருவாரூரில்]] இருந்து நான்கு பக்கங்கள் கொண்ட துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டது. நிதிநிலைக்கேற்றநிதிநிலைக்கு ஏற்ற எண்ணிக்கையில் பக்கங்கள் அச்சிடப்பட்டன. உலகப்போர் காலத்தில் சரியான அச்சுத்தாள்கள் கிடைக்காத சமயத்தில் 1942 முதல் 1944 வரை வெளிவந்து நின்றுபோன இந்த ஏடு, ஜனவரி 14, 1948 இல் மீண்டும் மறுபிறவி எடுத்தது. அதன்பின் ஏப்ரல் 2, 1954 இல் சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கியது. வார ஏடாக இருந்த முரசொலி, செப்டம்பர் 17, 1960 இல் நாளேடாக மாற்றப்பட்டு இன்றைக்கும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
முரசொலி வார ஏட்டில்தான் கருணாநிதியின் ‘புதையல்’, ‘வெள்ளிக்கிழமை’, ‘சுருளிமலை’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’ முதலான புதினங்கள் முதலில் தொடர்களாக வெளிவந்தன். கருணாநிதி “சேரன்” என்ற பெயரில் இவ்விதழை நடத்தினார்.
 
==குயில்==
{{main|குயில் (இதழ்)}}
[[பாரதிதாசன்|பாரதிதாசனால்]] 1947 இல் எட்டணா விலையில் தொடங்கப்பெற்றது ”குயில்” என்னும் இதழ். இது துவக்கத்தில்லேயே 4000 படிகள் வரைபடிகள்வரை அச்சிடப்பட்டது. இதில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, வடமொழி எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போன்ற கொள்கைகள் பரப்பப்பட்டன. கவிதை, கட்டுரை ஆகியவையும் வெளியாகின. குயில் விட்டுவிட்டு 128 இதழ்கள் வரைஇதழ்கள்வரை வெளிவந்து 1964 இல் நின்று போனது.
 
==குத்தூசி==
வரிசை 26:
 
==தென்றல்==
[[கண்ணதாசன்|கண்ணதாசனை]] ஆசிரியராகக் கொண்டு 1954 முதல் 1962 வரை எட்டு ஆண்டுகள் கிழமை இதழாக “தென்றல்” வெளிவந்தது. இது [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]]வின் சார்பில் வெளிவந்த போதும், இவ்விதழில் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் போன்றோரின் எழுத்துக்கள் இடம்பெற்றன. செய்திகளைச் சுவையோடும் பரபரப்போடும் வெளியிட்ட இவ்விதழ் தொடக்கத்திலேயே சுமார் 20,000 பிரதிகள் வரைபிரதிகள்வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும். பல இளம் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் வாய்ப்பளித்தது. தென்றல் நடத்திய [[வெண்பா]]ப் போட்டியில் கவிதை எழுதியவர்கள் பிற்காலத்தில் பெரும் கவிஞர்களாக விளங்கினர். இவ்விதழின் துணையாசிரியராக விளங்கிய தமிழ்ப்பித்தன், ஏ. கே. வில்வம், எஸ். எஸ். தென்னரசு, ப. புகழேந்தி, நாரா. நாச்சியப்பன், அருப்புக்கோட்டை ராமசாமி, மா. பாண்டியன், ஆகியோர் பின்னாளில் புகழ்பெற்றனர். இவ்விதழில் [[ந. மு. வேங்கடசாமி நாட்டார்]], [[மயிலை சீனி. வேங்கடசாமி]], [[சதாசிவ பண்டாரத்தார்]], [[கா. அப்பாதுரை]], [[மு. வரதராசன்]], ராசமாணிக்கனார், சிதம்பரநாதன் செட்டியார் போன்றோரின் கட்டுரைகள் வெளியாகின.
 
==காதல்==
வரிசை 33:
 
==கதிர்==
திராவிட இயக்க இதழ்களில் மிகவும் மாறுபட்டு வித்தியாசமாக விளங்கிய இதழ் ‘கதிர்’. இதன் ஆசிரியர் ப. புகழேந்தி, கண்ணதாசன் நடத்திய முல்லை, தென்றல், அண்ணாவின் “நம்நாடு” ஆகியவற்றில் துணையாசிரியராகப் பணியாற்றியவர், அண்ணாவிடம் நெருக்கமாகப் பழகியவர். இப்பத்திரிகை 1965 முதல் 1966 வரை 15 மாதங்கள் மட்டுமே வெளிவந்த போதிலும்வெளிவந்தபோதிலும் அதன் சமகால இதழ்களில் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தது. மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
 
==கலைமன்றம்==
கலைமன்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து 1952 முதல் 1956 வரை வெளிவந்த மாத இதழ். பால்வண்ணன் இதன் ஆசிரியர். பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவர். சன்மார்க்கம் பற்றிபற்றிச் [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[இலங்கை]] சென்று சொற்பொழிவாற்றியவர். திராவிட இயக்கத்தின் மீது பற்று கொண்டவர். ஊடுருவி என்னும் புனைப்பெயரில் எழுதியவர். தி.மு.க வின் வளர்ச்சிக்குக் கலைமன்றம் முக்கியப் பங்காற்றியது. இவ்விதழில் கதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், கேலிச்சித்திரம் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு, [[கோவி. மணிசேகரன்]], பூவண்ணன், சுப்பு ஆறுமுகம், துரை. அரசன், பா. கலைச்செழியன், [[அண்ணாதுரை]], [[என். எஸ். கிருஷ்ணன்]], கண்ணதாசன், கோவேந்தன், வேலாயுதசாமி, ஆசைத்தம்பி, ஏ. கே. வேலன், வாணிதாசன் போன்றோர் எழுதியுள்ளனர்.
 
==அலை ஓசை ==
வரிசை 53:
 
==தனியரசு==
‘வாலிபப் பெரியார்’ என்று அழைக்கப்பெற்ற திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர் [[ஏ. வி .பி. ஆசைத்தம்பி]]யால் நடத்தப்பெற்றது ‘தனியரசு’ என்னும் இதழ். இது முதலில் [[விருதுநகர்|விருதுநகரிலிருந்தும்]] பிறகு [[சென்னை]]யில் இருந்தும் வெளிவந்தது. தொடக்கத்தில் நாளிதழ் அளவில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதம் இருமுறை இதழாக 35,000 படிகள் வரைபடிகள்வரை விற்பனையானது. ஆசைத்தம்பி 10 ஆண்டுகள் நகராட்சி உறுப்பினராகவும், இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1977 இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். ”திராவிட சினிமா” என்ற திங்கள் இருமுறை திரைப்பட இதழையும் நடத்தியுள்ளார்.
 
==நாத்திகம் ==
[[பெரியார்]] மீதும் அவரது கொள்கைகள் மீதும்கொள்கைகள்மீதும் கொண்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாகச் செப்டம்பர் 17, 1958ல் பி. இராமசாமியால் தொடங்கப்பெற்றது ‘நாத்திகம்’. மாதம் இருமுறை இதழான இது 12 காசுகளுக்கு விற்கப்பட்டது. தி.மு.க வை ஆதரித்து எழுதிவந்த இதழ் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகத் தி.க. வை ஆதரித்து எழுதியது. அப்போதைய நிலையில் இவ்விதழ் 14,000 படிகள் வரைபடிகள்வரை விற்பனையானது. இவ்விதழை நாளேடாக மாற்றும் முயற்சிக்காக [[எம். ஆர். இராதா]], [[காமராஜர்]] தலைமையில் வாணி மஹாலில் நாடகம் நடத்தி 20,000 ரூபாய் நிதி திரட்டித் தந்தார். 1964 க்குப் பிறகு ‘நாத்திகம்’ நாளிதழாக வெளிவந்தது.
 
==பொன்னி==
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_இயக்க_இதழ்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது