ச. வெ. இராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
}}
 
[[சர்]] '''சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman)''' ([[நவம்பர் 7]], [[1888]] - [[நவம்பர் 21]], [[1970]]) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் [[இயற்பியல்]] துறைக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசைப்]] பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் <u>அலைநீள மாற்றத்தை </u> இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு '''[[இராமன் விளைவு]] (''Raman Effect'')''' என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்
 
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலே]] உள்ள [[திருச்சிராப்பள்ளி|திருச்சிராபள்ளிக்கு]] அருகில் அமைந்த [[திருவானைக்காவல்]] எனும் ஊரில் பிறந்தார். இராமன் அவர்கள் [[சென்னை]]யிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் கலை இளநிலை (‘பி.ஏ) பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, பிறந்து 16 ஆண்டுகள் தான் (அகவை 16) நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ச._வெ._இராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது