வில்கெம் எடுவர்டு வெபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 20:
}}
 
'''வில்கெம் எடுவர்டு வெபர்''' (''Wilhelm Eduard Weber'',{{IPA-de|ˈveːbɐ|lang}}; 24 அக்டோபர் 1804 – 23 சூன் 1891) [[செருமனி|செருமானிய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். இவர் [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்|கார்ல் காசுடன்]] இணைந்து முதல் மின்காந்த [[தந்தி]]யைக் கண்டுபிடித்தவர். [[காந்தப்பாயம்|காந்தப்பாயத்திற்கான]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக அலகுக்கு]] இவரது பெயர், வெபர், இடப்பட்டுள்ளது.
==வாழ்க்கை வரலாறு==
 
===இளமைக்காலம்===
வெபர் செருமனியின் விட்டென்பர்கில் இறையியல் பேராசிரியர் மைக்கேல் வெபருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று மக்களில் இரண்டாவதான வெபர், தனது மற்ற உடன்பிறப்புகளைப் போலவே அறிவியலில் நாட்டம் கொண்டார். விட்டென்பர்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டதையொட்டி இவரது தந்தையாருக்கு 1815இல் ஹால் என்ற நகருக்கு மாற்றலாயிற்று. அங்கு முதலில் தந்தையிடமும் பின்னர் அனாதை இல்லம் மற்றும் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் பல்கலைகழகத்தில் இணைந்து இயற்பியலில் ஆழ்ந்தார். தமது வகுப்புகளில் சிறந்து விளங்கிய வெபருக்கு முனைவர் பட்டத்துடன் பேராசிரியராகப் பணியும் அதே பல்கலைக்கழகத்தில் கிடைத்தது.
 
 
[[பகுப்பு:செருமானிய இயற்பியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்கெம்_எடுவர்டு_வெபர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது