சரணடைதல் (படைத்துறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:1971 Surrender of Pakistan.gif|thumb|250px|right|upright|பாகிசுத்தான் கட்டளை அதிகாரி 93,000 படைவீரர்களுடன் இந்திய-வங்காளதேசக் கூட்டுப் படைகளிடம் சரணடையும் காட்சி.]]
படைத்துறைச் சொற் பயன்பாட்டில் '''சரணடைதல்''' என்பது, பிரதேசத்தின் மீதான கட்டுப்பாடு, [[போர்வீரர்]], [[அரண்]]கள், [[கப்பல்]]கள், [[ஆயுதம்|ஆயுதங்கள்]] என்பவற்றை இன்னொரு படையினரிடம் துறந்து விடுவதைக் குறிக்கும். சரணடைதல் [[போர்]] எதுவும் இடம்பெறாமலேயே அமைதியாக நடைபெறலாம். அல்லது, போரில் ஒரு பகுதி தோல்வி அடைவதன் மூலம் ஏற்படலாம். [[இறைமை]] உள்ள நாடு ஒன்று போர் ஒன்றில் தோல்வியுற்ற பின்னர் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் அல்லது சரணடைதல் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இடுவதன் மூலம் சரணடைவது வழக்கம். [[போர்க்களம்|போர்க்களத்தில்]] தனிப்பட்ட வீரர்கள் அல்லது படைத் தலைமையின் கட்டளைப்படி மொத்தமாகச் சரணடையும் போது அவர்கள் [[போர்க் கைதி]]கள் ஆகிறார்கள்.
 
==வரலாறு==
ஒரு வெள்ளைக் கொடி அல்லது கைக்குட்டை சரணடைவதற்கான விருப்பத்தைக் காட்டும் சைகையாகப் பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனாலும், [[அனைத்துலகச் சட்டம்|அனைத்துலகச் சட்டங்களின்படி]] இது தீர்வுப் பேச்சுக்களுக்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு சமிக்ஞையையே குறிக்கும். இதன் விளைவு முறையான சரணடைதலாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். வழமையாக சரணடைதல் ஆயுதங்களைக் கையளிப்பதை உள்ளடக்கியது. முற்கால ஐரோப்பியப் போர்களில், சரணடையும் படைகளின் கட்டளை அதிகாரி தனது வாளை வெற்றி பெற்ற கட்டளை அதிகாரியிடம் கையளிப்பார். தனிப் போர்வீரர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுக் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்துவதன் மூலம் சரணடையலாம்.
 
[[பகுப்பு: முற்றுகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சரணடைதல்_(படைத்துறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது