குடும்பப் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குடும்பப் பெயர்''' என்பது, தற்காலத்தில் ஒருவருடைய பெயரில் [[சூட்டிய பெயர்|சூட்டிய பெயருடன்]] சேர்த்து வழங்கப்படும் பெயர் ஆகும். இந்த வழக்கம் மேற்கு நாடுகளில் தொடங்கி இன்று உலகின் பல பாகங்களிலும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் உயர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மரபுப் பெயர் அல்லது பட்டப் பெயர்களை சூட்டிய பெயர்களுடன் சேர்த்து வழங்கினர். இது '''கூடுதல் பெயர்''' என்னும் பொருளில், ஆங்கிலத்தில் ''surname'' என வழங்கப்பட்டது. இன்று குடும்பப் பெயர், கூடுதல் பெயர் இரண்டும் ஒரு பொருட் சொற்களாகவே பயன்பட்டு வருகின்றன. மேனாட்டு வழக்கில் குடும்பப் பெயர் முழுப் பெயரின் இறுதியில் வருவதால், இதை '''இறுதிப் பெயர்''' என்றும் அழைப்பது உண்டு. எனினும் பொதுவான ஐரோப்பிய வழக்கத்துக்கு மாறாகச் சில ஐரோப்பிய நாடுகளிலும், [[உருசியா]], [[சீனா]], [[சப்பான்]], [[கொரியா]], [[மடகாசுக்கர்]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளிலும், [[இந்தியா]]வின் சில பகுதிகளிலும் இது சூட்டிய பெயருக்கு முன் வைக்கப்படுகிறது.
 
உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் ஒருவரது பெயரில் சூட்டிய பெயர், குடும்பப் பெயர் எனக் கூறுகள் இருப்பதில்லை. பல பண்பாட்டினர், சூட்டிய பெயர் ஒன்றையே கொண்ட [[தனிப்பெயர்]] முறை கொண்டவர்களாக உள்ளனர்.
 
கூடுதல் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்னும் கருத்துரு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தைச் சேர்ந்தது. இது மத்திய காலத்தில் வழக்கில் இருந்த துணைப்பெயர் அல்லது பட்டப்பெயர் வழக்கத்தில் இருந்து உருவானது. ஒருவருடைய தொழில் அல்லது வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு துணைப்பெயர்கள் வழங்கப்பட்டன. ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருக்கும்போதே பெரும்பாலும் துணைப் பெயர்களின் தேவை ஏற்பட்டது.
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பெயரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/குடும்பப்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது