ரூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,817 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
மௌலானா அவர்களுக்கு 12 வயதாக இருந்தபோது, மங்கோலிய கொள்ளைக்காரர்கள் அடிக்கடி கொரஸான் மாகாணத்தினுள் நுழைந்து நாசம் விளைவித்து வந்தனர். இதனால் பயந்த பல்கு நகரத்தின் குடிமக்கள் துருக்கியிலுள்ள 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறினார்கள். தமது தந்தையிடமே கல்வி கற்றுத் தெளிந்த அவர்கள், தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் பெரியார் ஸையிது புர்ஹானுத்தீன் முஹக்கீக் அவர்களிடம் பல்வேறு கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அப்பெரியாரிடமிருந்தே ஆத்மஞானத் தீட்சையும் கிடைக்கப் பெற்றார்கள். பெரியார் புர்ஹானுத்தீன் அவர்கள் இறையடி சேர்ந்ததும், 33 ஆம் வயதில் மௌலானா அவர்கள் தமது சீடர்களுக்குத் தீட்சை வழங்கிவந்தார்கள்.
 
இவ்விதமாக நான்கு ஆண்டுகள் கழிந்த சந்தர்ப்பத்தில் மௌலானா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக சூபி வாழ்க்கைக்கு மாற்றிவிட்ட, மர்மங்கள் நிறைந்த ஷம்ஸுத் தப்ரேஸ் என்ற மனிதரைச் சந்தித்தார். அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ரூமி, இரண்டு ஆண்டுகள் தங்களுடைய வீட்டின் ஒரு அறையில் ஷம்ஸுத் தப்ரேஸோடு தனித்திருந்து ஆத்மஞானப் படித்தரங்களை எய்தப் பெற்றார்கள். இந்த இரண்டு ஆண்டுக்காலத்தில் தம்முடைய குருநாதர் நம்மிடமிருந்து விலகிவிட்டார், இதற்குக் காரணமாக அமைந்தவர் ஷம்ஸுத் தப்ரேஸ்தான் என்று எண்ணி சீடர்கள் அவரை மிக இழிவாகப் பேசத் தொடங்கினர். இது தெரிந்த ஷம்ஸுத் தப்ரேஸ் யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார். இந்த ஷம்ஸுத் தப்ரேஸியை விளித்துப் பாடிய பாடல்கள்தான் "திவானே ஷம்ஸே - தப்ரேஜ்" என்ற நூலாகப் பெயர் பெற்றது. இந்த நூலில் சுமார் 2500 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
 
ரூமி தனது ஒரு கவிதையில் அட்டாரஐ தனது ஆன்மாகவாகவும் சானையை தனது இரு கண்களாகவும் கொண்டதால் அவர்களின் சிந்தனை தொடரில் வந்தவன் நான் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு கவிதையில் அட்டார் இன்றும் இருக்கும் ஒரு தெருவின் திருபத்தில்திருப்பத்தில் உள்ள ஏழு காதல் நகரங்களின் ஊடே பயணித்தவர் என்கிறார். ரூமியின் தந்தையும் நிஜாம் அல் டின் குப்ராவின் ஆன்மீக வழியுடன் தொடர்புடையவர்.
 
மௌலானா அவர்களுடைய ஆத்மஞான போதனைகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, எல்லோரும் வட்டமாக நிற்க பின்னணியில் புல்லங்குழல் இசை ஒலிக்க தெய்வநாம பூஜிப்பில் ஈடுபட்டு பரவசநிலையை எய்துவதை தம்முடைய ஆன்மீகப் போதனையில் புகுத்தினார். மௌலானா அவர்களுடைய பிரதான சீடராகவும், உற்ற தோழராகவும் விளங்கிய ஹுஸாமுதீன் ஹஸன் இப்னு அகீ துருக்கைப் பற்றி தன்னுடைய உபன்னியாசங்கள் அனைத்திலும் பாராட்டிப் பேசாமல் இருப்பதில்லை. மௌலானா அவர்கள் தனது தோழர் ஹுஸாமுதீன் மீது வைத்திருந்த அபரிமிதமான அன்பின் காரணமாக "மஸ்னவி" யில் ஓரிடத்தில் "ஹுஸாம் நாமா" என்று இரண்டு பாடல்களுக்கு பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். "மஸ்னவி" நூலை தினமும் பாடல்களைச் சொல்லச்சொல்ல ஹுஸாமுத்தீன் அவர்கள் எழுதிவந்தார்கள். மொத்தம் ஆறு பாகங்களில் 25600 பாடல்கள் எழுதி முடிந்தபோது, மௌலனா அவர்கள் தமது 68 வது வயதில் (ஹிஜ்ரி 672 ஜமாதுல் ஆகிர் 5ம் நாள் / கி.பி. 1273 டிசம்பர் 16) காலமானார்கள். "மஸ்னவி" முற்றுப்பெறாத நிலையிலே மௌலானா இறையடி சேர்ந்தாலும், மஸ்னவி ஒரு பூரணமானதாகவே காணப்படுகின்றது.
 
A.J. Arberry தன்னுடைய 'Rumi, Poet and Mystic' புத்தகத்தில் " மௌலானா ரூமி பாரஸீகத்து மெய்நிலை கண்ட ஞானத்தை மிக உன்னதமாக வெளியிட்டவர்கள். ஸூபி பாடல்கள் என்ற பரந்த காட்சியைக் கண்ணோட்டமிடுவோமாயின் அவற்றிடை அவர்களை உன்னதமான மலைச்சிகரமாகவே பார்க்கிறோம். அவர்களுக்கு முன்னும், பின்னும் வந்த கவிஞர்களை அவர்களோடு ஒப்பிடின் சாதாரணக் குன்றுகளாகவே தென்படுகின்றனர்.
 
 
ரூமி தனது ஒரு கவிதையில் அட்டாரஐ தனது ஆன்மாகவாகவும் சானையை தனது இரு கண்களாகவும் கொண்டதால் அவர்களின் சிந்தனை தொடரில் வந்தவன் நான் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு கவிதையில் அட்டார் இன்றும் இருக்கும் ஒரு தெருவின் திருபத்தில் உள்ள ஏழு காதல் நகரங்களின் ஊடே பயணித்தவர் என்கிறார். ரூமியின் தந்தையும் நிஜாம் அல் டின் குப்ராவின் ஆன்மீக வழியுடன் தொடர்புடையவர்.
 
==மேற்கோள்கள்==
1,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1732169" இருந்து மீள்விக்கப்பட்டது