மும்மலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஒரு தத்துவப் பிரிவாகிய [[சைவசித்தாந்தம்]] மூன்று உண்மைப் பொருள்கள் பற்றிக் கூறுகின்றது. இவை, ''பதி (இறைவன்)'', ''பசு (உயிர்கள்)'', ''பாசம் (மலங்கள்)'' என்பனவாகும். மலங்கள் மூன்று வகையாக உள்ளன. இவற்றை ஒருமித்து '''மும்மலங்கள்''' என்பது வழக்கம். சைவ சித்தாந்தத்தின் படி இறைவன், உயிர்கள், மலங்கள் ஆகிய மூன்றும் எப்பொழுதும் நிலைத்திருப்பவை. இவற்றுள் எதுவுமே மற்றொன்றால் படைக்கப்பட்டது அல்ல என்கிறது இத் தத்துவம். இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் குறையுள்ள அறிவு கொண்ட உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் உயிர்களின் அறிவை, அறிவற்ற சடப்பொருள்களான மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்,
 
வரி 17 ⟶ 16:
மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். [[உடல்]], [[உலகு]] மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள [[அறிவு|அறிவைச்]] சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது இம் மாயை என்று சொல்லப்படுகின்றது. [[சூரியன்]] இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய [[விளக்கு|விளக்கின்]] [[சுவாலை]]யை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள்.
 
==உசாத்துணைகள்==
* மணி, சி. சு.; ''சைவ சித்தாந்தம்''; ஞானன், செ., இ. எஸ். டி.; தத்துவ தரிசனங்கள்; மணிவாசகர் பதிப்பகம்; சென்னை; 1999.
* கணபதி, டி. என்.; இந்து மதமும் இந்திய தத்துவமும் - ஒரு கண்ணோட்டம்; ரவி பப்ளிகேஷன்ஸ்; சென்னை; 2005.
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/மும்மலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது