மும்மலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
===மாயை===
மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். [[உடல்]], [[உலகு]] மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள [[அறிவு|அறிவைச்]] சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது இம் மாயை என்று சொல்லப்படுகின்றது. [[சூரியன்]] இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய [[விளக்கு|விளக்கின்]] [[சுவாலை]]யை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள்.
 
மாயை மிக நுண்ணியது என்றும், அது இறைவனடியிலேயே இருக்கிறது என்றும், ஒரு சிறு [[விதை]] எவ்வாறு பெரும் [[மரம்|மரங்கள்]] உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மாயையும் இந்தப் பெரும் [[அண்டம்|அண்டத்தின்]] உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது என விளக்குகிறது சைவசித்தாந்தம்.
 
மாயையும், தூய மாயை (சுத்த மாயை), தூய்மையில் மாயை (அசுத்த மாயை), பகுதி மாயை (பிரகிருதி மாயை) என மூன்று வகையாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மும்மலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது