வாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.
நேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.
தொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.
தென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக [[:en:Chile|Chile]] நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.
பகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்க்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.
== நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு ==
[[பகுப்பு:நேர வலயங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
{{Link FA|ar}}
{{Link FA|ca}}
{{Link FA|en}}
{{Link FA|es}}
{{Link FA|he}}
|