சிசுபாலன் (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிசுபாலன் (திரைப்படம்)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
No edit summary
வரிசை 1:
#வழிமாற்று [[சிசுபாலன் (திரைப்படம்)]]
'''சிசுபாலன்''' கிருஷ்ணனின் அத்தை மகன். சிசுபாலன் பிறக்கும் பொழுதே நான்கு கைகளையும் மூன்று கண்களையுமுடையனாயிருந்தான். அப்பொழுது அனைவரும் இது என்னவென்று வியக்கும்போது ஆகாயவாணியார், யார் இவனைத் தொடுகையில் இவனது கைகளிரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று கூறிற்று: அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டவளவிலே மறைபட்டன, அதனால் ‘இவனைக் கொல்பவன் கண்ணனே’ என்றறிந்த சிசுபாலனின் தாய், யாது செய்யினும் என் மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு இணங்கிய [[கண்ணன்]] ‘இவன் எனக்கு நூறு பிழைசெய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன் என்று கூறியருளினன். பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் எதிரி சத்ருவென்பதை இளமையிலேயே அறிந்து பகைமையைப் பாராட்டி, எப்பொழும் கண்ணனை நிந்திப்பதே தொழிலாக இருந்தான். <ref>http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்</ref>.
 
இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்துவைத்திருந்த ருக்மிணியைக் [[கண்ணன்]] வலியக் கவர்ந்து மணஞ்செய்துகொண்டது முதல் இவன் கண்ணனிடத்து மிக்க பகைமை வைரங்கொண்டனன்.
 
பின்பு [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்தில்]]  [[நாரதர்]] சொன்னாற்போல ராஜசூய யாகம் இனிதே நடந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது. [[பீஷ்மர்]] மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து கண்ணனுக்கு முதல் மரியாதை என்று தீர்மானிக்க. அதன்படி [[சகாதேவன்]] கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.
 
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மரையும், [[தர்மன்|யுதிஷ்டிரரையும்]] புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான். கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்றான். (கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான்) சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனைக் கொல்லும் காலம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்து வீழ்த்தியது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/சிசுபாலன்_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது