யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 6:
| Caption = யமனின் அவை மற்றும் நரகம்<br /> நீல நிற யமன் [[யமி]] மற்றும் சித்திர குப்தருடன்
| Devanagari = यम
| Sanskrit_Transliteration =
| Pali_Transliteration =
| Tamil_script = யம
| Affiliation = [[தேவர் (இந்து மதம்)|தேவர்]]
வரிசை 16:
| Consort = [[யமி]] அல்லது சியாமளா அல்லது ஐய்யோ தேவி
| Mount = [[எருமை (கால்நடை)|எருமை]]
| Planet =
}}
 
'''யமன்''' இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.
 
யமனுக்கு [[சித்திரகுப்தர்]] உதவி செய்கிறார். இவரே மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கை சரி பார்த்து அவற்றை குறித்துக் கொண்டு, அந்த தகவல்களை யமனுக்குத் தெரிவிக்கிறார். இந்தக் கணக்கின்படியே, மனிதர்களை [[நரகம்|நரகத்துக்கு]] அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என முடிவெடுக்கப்படுகிறது. யமனை தர்மத்தின் தலைவனாகக் கருதி, இவரை ''யம தர்ம ராஜா'' எனவும் அழைப்பதுண்டு. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக யமன் கருதப்படுகிறார்
 
== குணவியல்புகள் ==
 
யமன் ஒரு [[திக்பாலர்]] மற்றும் ஓர் [[ஆதித்யர்]] ஆவார். ஓவியங்களின் இவர் பச்சை அல்லது சிவப்புத் தோலுடன், எருமையை வாகனமாகாக கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். தன்னுடைய இடக்கரத்தில் பாசக்கயிற்றை வைத்துள்ளார், அதன் மூலம் மனிதர்களின் ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கிறார். இவர் [[சூரிய தேவன்|சூரிய தேவனின்]] மகன் இவர் ஆவார். இவரது சகோதரி [[யமி]] அல்லது [[யமுனா]] ஆவார். இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். ரிக் வேதத்தின் பத்தாம் பாகத்தில் 10,14,135 சுலோகங்கள் இவரை நோக்கி உள்ளன.
 
யமன் தர்மத்தின் தலைவர் ஆவார். கதா உநிடத்தில் யமன் மிகச்சிறந்த ஆசிரியராக சித்தரிக்கப்படுகிறார். இவர் [[யுதிஷ்டிரன்|யுதிஷ்டிரரின்]] தந்தையும் ஆவார். கருட புராணத்தில் அவ்வபோது யமன் குறிப்பிடப்படுகிறார். இவரது மனைவி [[சியாமளா]] தேவி என்றும் உள்ளது.
 
== சிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிதல் ==
 
யமன் [[சிவன்]] மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிந்தவராக புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனை சிவன் அழிக்க முற்பட்டுள்ளார். அதே போல், பாவங்கள் பல செய்திருப்பினும், இறக்கும் தருவாயில் தன்னையும் அறியாமல் '''நாராயணா''' என அழைத்த அஜமிலனுக்கு திருமால் யமதூதர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றி மோட்சத்தை அருள்கிறார்.
வரிசை 38:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் எமன் எருமை வாகனத்தில் உள்ளார்
 
== எமனின் வேறு பெயர்கள் ==
தருமன் <br> />
தருமதேவன் <br />
ஏமராஜன் (ஏமம் என்றால் எருமைமாடு என பொருளாகும்) <br />
காலதேவன்
 
== மகாபாரதத்தில் ==
[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]], விதுரர் மற்றும் பாண்டவர்களின் மூத்த சகோதரர் தர்மர் இருவரும் தர்மதேவதையின் உருவாகக் கூறப்படுகின்றனர்.
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 52:
* [http://www.chennaionline.com/festivalsnreligion/religion/religion33.asp யமனும் மஹாவிஷ்ணுவும்]
 
== மேற்கோள் ==
Meid, W. 1992. ''Die Germanische Religion im Zeugnis der Sprache''. In Beck et al., ''Germanische Religionsgeschichte – Quellen und Quellenprobleme, pp. 486-507. New York, de Gruyter.
 
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது