சிங்களம் மட்டும் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
'''சிங்களம் மட்டும் சட்டம்''' (''Sinhala Only Act'') அல்லது அதிகாரபூர்வமாக '''1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்''' (''Official Language Act'') என்பது [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க]] தலைமையிலான [[இலங்கை]] அரசாங்கத்தால் [[1956]] ஆம் ஆண்டு [[சூன் 5]] ஆம் நாள் [[இலங்கை நாடாளுமன்றம், 1947-19721947–1972|இலங்கை நாடாளுமன்றத்தில்]] நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான [[ஆங்கில மொழி]] அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை [[சிங்களவர்]]கள் பேசும் [[சிங்கள மொழி]] ஆட்சி மொழியாக்கப்பட்டது.
 
== பிரித்தானிய ஆட்சி ==
[[பிரித்தானியா|பிரித்தானியரின்]] ஆட்சியின் கீழ் [[ஆங்கிலம்]] ஆட்சி மொழியாக இருந்தது. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. [[1936]] ஆம் ஆண்டில் [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில்]] வெற்றி பெற்ற [[இடதுசாரி]]களான [[என். எம். பெரேரா]], [[பிலிப் குணவர்தனா]] போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் [[தமிழ்]] ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். நவம்பர் 1936 இல், 'இலங்கைத் தீவு முழுவதும் [[இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்|உள்ளாட்சிகள்]] மற்றும் காவல்துறை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும்' மற்றும் 'காவல் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும்' போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டடன. [[1944]] ஆம் ஆண்டில் [[ஜே. ஆர். ஜெயவர்தனா]] ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அதிகாரபூர்வமொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார்<ref>{{Citecite web|title=Mr.J.R.Jayawardene on 'Sinhala Only and Tamil Also' in the Ceylon State Council|url=http://www.tamilnation.co/indictment/indict004.htm#Mr.J.R.Jayawardene}}</ref>. ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து [[1956]] வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது.
 
== சட்டமூலம் ==
[[1948]] ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று [[டொமினியன்]] அந்தஸ்து பெற்றது. [[1951]] ஆம் ஆண்டில் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா|பண்டாரநாயக்கா]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இருந்து விலகி [[இலங்கை சுதந்திரக் கட்சி]] என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் [[மகாஜன எக்சத் பெரமுன (1956)|மகாஜன எக்சத் பெரமுன]] கூட்டணி [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] பெரும் வெற்றி பெற்றது. பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் (1956, சூன் 5) சிங்களம் மட்டும் சட்டம் [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை]]யில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. தமிழ்க் கட்சிகள், மற்றும் [[லங்கா சமசமாஜக் கட்சி|சமசமாஜக் கட்சி]], [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி|கம்யூனிஸ்டுகள்]] எதிர்த்து வாக்களித்தனர்.
 
இம்மசோதா 1956 [[சூலை 6]] இல் [[இலங்கை செனட் சபை|செனட் சபை]]யில் நிறைவேற்றப்பட்ட போது 19 பேர் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்<ref name="virakesari5">''உருவாக்கப்பட்ட மொழிப்பிரச்சினையும் உருவாகிய இனப்பிரச்சினையும்'', திருமலை நவம், [[வீரகேசரி]], நவம்பர் 5, 2011</ref>.
வரிசை 19:
* அரச நிறுவன தொடர்பு மொழி தமிழ்,
* வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நடவடிக்கைகள் தமிழில் இடம்பெறல்
ஆகியனவாகும்<ref name="virakesari5" />.
 
[[தமிழர்]] வாழ் பகுதிகளில் [[தமிழ்|தமிழும்]] பயன்படுத்தப்படலாம் எனும் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக, இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிங்களம்_மட்டும்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது