பாசுக்கு நாடு (பெரும் பகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 21:
|map_caption2 = பாசுக்கு நாட்டினதாகக் கருதப்படும் ஏழு மாநிலங்கள்-- [[பிரான்சு|பிரான்சிலுள்ளவை]] இளம் மஞ்சள் வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. ஏனையவை [[எசுப்பானியா]]வில் உள்ளன. அயலகப் பகுதிகளான ''வாலெ டெ வில்லாவெர்டெ''யும் ''டிரெவினோ''வும் சிவப்பு மற்றும் நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. படத்தில் உள்ள பெயர்கள் பாசுக்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன.
}}
'''பாசுக்கு நாடு''' (''Basque Country'', [[பாஸ்க் மொழி|பாசுக்கு]]: ''Euskal Herria'') [[பாசுக்கு மக்கள்|பாசுக்கு மக்களின்]] தாயகப் பகுதி ஆகும்.<ref name=Trask>[[Larry Trask|Trask, R.L.]] ''The History of Basque'' Routledge: 1997 ISBN 0-415-13116-2</ref> இது [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்கு]] கடலோரத்தில் மேற்கு [[பிரனீசு மலைத்தொடர்|பிரனீசில்]] [[பிரான்சு]], [[எசுப்பானியா]] எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 16வது நூற்றாண்டிலிருந்தே பாசுக்கு மக்கள் வாழும் இப்பகுதியின் பெயர் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.<ref name=EH>{{cite web|url=http://www.euskaltzaindia.net/index.php?option=com_oeh&Itemid=413&lang=eu&sarrera=euskal&view=frontpage&xeh=26|title=Euskal Herri|publisher=[[Euskaltzaindia]]|accessdate=22 August 2012}}</ref> 18ஆம் நூற்றாண்டிலிருந்து பாசுக்கு மக்களை தனியாக அடையாளப்படுத்தவும் தனிநாடு கோரியும் எழுச்சி பெற்றுள்ள [[பாசுக்கு தேசியவாதம்|பாசுக்கு தேசியவாதத்திற்கு]] முன்னமே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.
 
இதில் எசுப்பானியாவின் [[எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்|தன்னாட்சி சமூகங்களான]] [[பாசுக்கு நாடு (தன்னாட்சி சமூகம்)|பாசுக்கு நாடு]] மற்றும் [[நவார்|நவாரும்]] பிரான்சின் [[வடக்கு பாசுக்கு நாடு]]ம் அடங்கியுள்ளன.
 
வெவ்வேறு மண்டலங்களிலும் நாடுகளிலும் உள்ள ஒரே பண்பாட்டைப் பேணும் பாசுக்கு நாடு குறித்த கருத்துரு [[பாசுக்கு தேசியவாதம்|அரசியல் இயக்கமாக]] உருவாகியுள்ளது. இது [[பாசுக்கு மக்கள்]] வாழும் பகுதி, இவர்களது மொழி ([[பாஸ்க் மொழி|பாசுக்கு மொழி]]), பண்பாடு மற்றும் மரபுகள் ஒன்றேயாகும்.<ref>Mughal, Muhammad Aurang Zeb. 2012. Spain. Steven L. Denver (ed.), ''Native Peoples of the World: An Encyclopedia of Groups, Cultures, and Contemporary Issues'', Vol. 3. Armonk, NY: M .E. Sharpe, pp. 674–675.</ref> இருப்பினும் இங்கு வாழ்வோர் அனைவருமே தங்களை பாசுக்கு மக்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை; 1996 மக்கள்தொகை கணக்கெடுப்பில் நவாருக்கு தென்பகுதியில் 71% குடிமக்கள் தங்களை பாசுக்காக அடையாளப்படுத்தவில்லை. இப்பகுதியில் 53% மக்கள் பாசுக்கு மொழியை ஆதரிக்க ஒப்பவில்லை.<ref>{{cite web|url=http://www.euskara.euskadi.net/r59-738/eu/contenidos/informacion/argitalpenak/eu_6092/adjuntos/NAFEUS.PDF|title=Euskal Herriko Soziolinguistikazko Inkesta 1996 – Nafarroa |author=<!--Staff writer(s); no by-line.-->|year=1997|publisher=Eusko Jaurlaritza, Nafarroako Gobernua, EKE|accessdate=6 January 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாசுக்கு_நாடு_(பெரும்_பகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது