இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்''' [[இறைமறுப்பு]] கொள்கையின் அரசியல் மற்றும் சமுதாய தாக்கம், செல்லத்தக்கதன்மை ஆகியன குறித்த விமர்சனங்களைக்குறிக்கும். இவை [[ஆத்திகம்|ஆத்திக]] கோட்பாடுகளின் அடிப்படையிலோ, [[ஒழுக்கநெறி]] குறித்தனவாகவோ அல்லது இறைமறுப்புக்கு தனிமாந்தர் வாழ்வில் இருக்கும் தாக்கம், இதன் ஊகங்கள் முதலியவற்றின் அடிப்படையிலோ அமைந்துள்ளன. இறைமறுப்பு பலவகைப்படுவதாலும் இறைமறுப்புக்கு சீரான வரையறைகள் இல்லாததாலும் இவ்வகை விமர்சனங்கள் சிக்கலானவை ஆகும்.
 
[[அறியவியலாமைக் கொள்கை]]யாளர் பலர் இறைமறுப்பாளர்களை அறிவியலுக்கு பொருந்தாத அல்லது வறட்டுத்தனமான கொளகியினை உடையவர்கள் என சாடுகின்றனர். குறிப்பாக ஒன்றின் இருத்தலுக்கு ஆதாரம் இலாதது, அதன் இருத்தல் இல்லாததற்கு ஆதாரமாகாது என்பது இவர்களின் நிலைப்பாடு. ('absence of evidence cannot be equated with evidence for absence'.) ஆல்வின் பிலான்டிங் போன்ற மெய்யியளாளர்கள் இறைமறுப்புக்கொள்கையினால் சீரமைந்த அண்டத்தை (fine-tuned Universe) எப்போதும் விளக்க இயலாது என்கின்றனர். இதனால் இறைமறுப்பினை விட அறியவியலாமைக் கொள்கையே சிறந்தது என்கின்றனர்.
 
இக்கொள்கையினை கொண்டிருந்த [[பிரெஞ்சுப் புரட்சி]]யாளர்கள், மார்க்சிட்-லெனினிஸ்ட் இறைமறுப்பாளர்கள், மற்றும் 20ம் நூற்றாண்டின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் பலரின் செயல்கள் இவர்களின் கொள்கையின் விளைவு என விமர்சிக்கப்படுகின்றனர். பிரெஞ்சுப் புரட்சியாரர்களை பர்க் என்பவர் ''இறைமறுப்பு பைத்தியக்காரர்கள்'' (atheistical fanaticism) என விமர்சிக்கின்றார். சீனாவின் [[மா சே துங்]], வடகொரியா மற்றும் கம்போடியாவின் [[போல் போட்]] போன்றோரின் கொடுங்கோலாட்சிக்கு முன்னோடியாக இருந்த [[ஜோசப் ஸ்டாலின்]] இறைமறுப்பு ஆட்சியினை 1937இல் வெளியான திருத்த்ந்தையின் சுற்றுமடல் சாடியது. செஸ்டர்டன் "கடவுளை நம்பாதோர் எதை வேண்டுமானாலும் நம்புவர்" என்கின்றார்.<ref>http://www.chesterton.org/discover-chesterton/frequently-asked-questions/cease-to-worship/</ref>
 
== வன்முறையும் கொடுங்கோன்மையும் ==
இறைமறுப்பு கொள்கை கொண்ட அரசுகள் பல பத்து மில்லியன் மக்களை கொலை செய்துள்ளன. [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனில்]] 60 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் (ஆதாரம் தேவை). [[கம்போடியா|கம்போடியாவில்]] 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் (ஆதாரம் தேவை). [[சீனா]], [[வட கொரியா]] போன்ற நாடுகள் பாரிய மனித உரிமை மீறல்களுக்காக குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இந்த எல்லா நாடுகளும் சர்வதிகார ஆட்சியைக் கொண்டவை. இதுவரைக்கும் இறைமறுப்பு அரசக் கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளில் எல்லாம் சர்வதிகாரமே தோன்றியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு_நோக்கி_விமர்சனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது