"கத்தோலிக்க திருச்சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
''கத்தோலிக்க'' ('''καθολικός''', ''katholikos'') என்ற பதம் [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லின் மூலப்பொருள் ''உலகளாவிய'' அல்லது ''அனைவருக்கும் பொதுவான'' என்பதாகும். இதன்படி ''கத்தோலிக்க திருச்சபை'' என்பது, [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவால்]] ''உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்ட [[திருச்சபை]]'' என்ற கருத்தைத் தருகிறது. இப்பெயர் திருச்சபையால் [[கி.பி.]] [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டிலிருந்து]] பயன்படுத்தப்படுகிறது. திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] சீடரான [[அந்தியோக்கு இஞ்ஞாசியார்]] என்பவரே, [[கிறித்தவர்|கிறிஸ்தவ]] சமூகத்தை முதன்முதலில் '''கத்தோலிக்க திருச்சபை''' என்று அழைத்தார். புனித [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] வழிவருகின்ற [[திருத்தந்தை]]க்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, "கத்தோலிக்க திருச்சபை" என்று வரலாற்றில் அறியப்படுகிறது.
 
ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், புரடஸ்தாந்து சபைகளில் சிலவும் "கத்தோலிக்க" என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன.<ref>[http[://en.wikipedia.org/wiki/:Catholic |"கத்தோலிக்க" என்பதின் பொருள்]]</ref> "கத்தோலிக்க" என்னும் அடைமொழிக்கு எல்லாக் கிறித்தவ சபைகளும் ஒரே பொருள் கொடுப்பதில்லை. பல கிறித்தவ சபைகள் அந்த அடைமொழியைப் பயன்படுத்தி தம்மை பழமையான அல்லது உலகளாவிய திருச்சபையாக அடையாளம் காட்ட விரும்புகின்றன.
 
== தோற்றமும் வரலாறும் ==
ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. [[4ம் நூற்றாண்டு|4ம் நூற்றாண்டில்]] கிறிஸ்தவம் [[ரோம்|உரோமையில்]] சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. [[313]] ஆம் ஆண்டு [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] [[முதலாம் கான்ஸ்டன்டைன்|கான்ஸ்டாண்டைன்]] வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட '[[நைசின் விசுவாச அறிக்கை]]' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க, கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு, கி.பி. [[380]] ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.
 
[[படிமம்:San Pietro Basilica.jpg|thumbnail|left|250px|இயேசுவின் தலைமைச்சீடர் புனித இராயப்பரின் சிலை]]
[[11ம் நூற்றாண்டு|11 ஆம் நூற்றாண்டில்]] திருச்சபை பெரும் கருத்து முரண்பாட்டை (Great Schism) எதிர்நோக்கியது. பொதுவாக [[1054]] ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். இதன் போது கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை,சமயபோதனைகள் (liturgical), சமய கோட்பாடுகள் (doctrine) தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. முக்கியமாக பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தது. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன. இரண்டாம் இலியோன்ஸ் மன்றம், 1274 மற்றும் பசெல் மன்றம், 1439 இவ்விரு திருச்சபைகளையும் இணைக்க முயன்றது எனினும் இன்று வரை இத்திருச்சபைககள் பிரிந்தே செயற்படுகின்றன. இவ்விரு திருச்சபைகளும் நைசின் விசுவாச அறிக்கையில் கூறப்பட்ட ஓரே,புனித,கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபை தாமே என உரிமை கோறிவருகின்றன. அது முதல் சில கீழ் மரபு வழாத திருச்சபைகள் பாப்பரசரின் தலைமையை எற்று கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துள்ளன.
 
டெரன்ட் மன்றத்துக்குப் பிறகான மூன்று நூற்றாண்டுகள் இம்மன்றத்தின் சீர்த்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் கிறிஸ்தவ கல்வியிலும் மற்றும் மறைப்பரப்பு பயணங்களிலும் திருச்சபை முக்கிய கவனமெடுத்துக்கொண்டது. இப்பணிகளில் 'இயேசு சபை' குருக்களும் 'பிரன்சிஸ்கன்' குருக்களும் முன்னின்று செயற்பட்டனர். [[18ம் நூற்றாண்டு|18]], [[19ம் நூற்றாண்டு|19]] ஆம் நூற்றாண்டுகளில் சமய சீர்த்திருத்தவாதிகளால் மட்டுமல்லாது விஞ்ஞான வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி போன்ற வற்றாலும் திருச்சபை பல சவால்களை எதிர்நோக்கியது.
 
முதலாம் வத்திக்கான் சங்கம் (1869-18701869–1870), இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962–1965) போன்ற மன்றங்கள் அவ்வப்போதிருந்த பாப்பரசர்களால் கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபை காலத்துகேற்றவாரு புதுப்பிக்கப்பட்டது.
 
== இரண்டாம் வத்திக்கான் சங்கம் ==
{{mainMain|இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்}}
இரண்டாம் வத்திக்கான் சங்கம் [[ரோம்]] நகரில் [[1962]] முதல் [[1965]] வரை ஒவ்வொரு ஆண்டும் [[இலையுதிர் காலம்|இலையுதிர்]] காலத்தில் நடைபெற்றது. பாப்பரசர் அருளப்பர் XXIII முதலாவது ஆண்டில் தலைமை வகித்தார். பின்னர் பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் கூட்டங்களை தொடர்ந்து நிறைவு செய்தார். கத்தோலிக்க திருச்சபையை புதுப்பித்தலும் கிறிஸ்தவ மறுஒன்றிப்புமே இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்கள். இச்சங்கம் உருவாக்கிய இரண்டு முக்கிய ஏடுகள் - சமய சுதந்திரம் (Dignitatis Humanae) மற்றும் நவீன உலகில் திருச்சபையின் மேய்ப்புப்பணி அமைப்பு (Gaudium et Spes) ஆகியனவாகும்.
 
 
== செபங்களும் கோட்பாடுகளும் ==
{{mainMain|கிறித்தவ இறைவேண்டல்கள்}}
* [[கிறித்து கற்பித்த செபம்|கிறிஸ்து கற்பித்த செபம்]]
* [[நைசின் விசுவாச அறிக்கை|விசுவாச அறிக்கை]]
 
=== திருமறைச்சுவடி ===
திருமறைச் சுவடி என்பது கத்தோலிக்க கிறித்தவ சபையினர் நம்பி ஏற்கின்ற கொள்கைத் தொகுப்பின் சுருக்கம் ஆகும். ஆங்கிலத்தில் Catechism என்று அழைக்கப்படுகின்ற இத்தொகுப்பு சின்னக் குறிப்பிடம் என்றும் அறியப்பட்டது. கடந்த 450 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கப்பட்ட இச்சிறு நூல் திருத்திய பதிப்பாக 2007ஆம் ஆண்டு திருமறைச் சுவடி (புதிய குறிப்பிடம்) என்னும் பெயரில் வெளிவந்தது. இது வினா-விடை வடிவில் அமைந்தது. இந்நூலுக்கு முன்னோடியாக 1578இல் அச்சேறிய முதல் தமிழ் நூலாகிய தம்பிரான் வணக்கம் என்னும் ஏட்டையும், தத்துவபோதகர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி (தமிழகத்தில்: 1606-16561606–1656) எழுதியதாகக் கருதப்படும் சின்னக் குறிப்பிடம் ஏட்டையும் கருதலாம்.
 
=== [[சிலுவை அடையாளம்]] ===
 
=== நம்பிக்கை முயற்சி ===
என் இறைவா/ நீர் தந்த வாக்குறுதிகளை / நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவைன் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமதி அருளையும்
வானக வாழ்வையும் அளிப்பீர் என்று உறுதியாக நம்புகிறேன். ஆமென்.
 
=== தேவதாயை நோக்கி [[பெர்னார்டின் செபம்]] ===
இரக்கம் மிகுந்த தாயே/ உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த எவரும் ஏமாந்தார் என
உலகில் என்றுமே கேட்டதில்லை. அம்மா இதனை நினைத்தருள்வாயே. கன்னியருள் உயர் கன்னியே/ தாயே /
இப்பெரும் நம்பிக்கையால் உந்தப்பட்ட நான் உன்னிடம் ஓடிவருகிறேன். பாவி நான். உன் தாள் விழுகிறேன்.
வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/ என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1743542" இருந்து மீள்விக்கப்பட்டது