மகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மகன்''' என்ற சொல் ஆண்பால் மகவினைக் குறிக்கும் உறவுமுறைப் பெயர். அதாவது, ஒரு பெற்றோருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளை அவர்களுடைய மகன் எனப்படுவான்..<ref>சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் [http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.9:1:7054.tamillex மகன் என்னும் சொல்லுக்கான பதிவு]</ref> இதற்கிணையான பெண்பால் மகவு [[மகள்]] எனப்படுகிறாள். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் ஆண்,ஆடவர் மற்றும் ஆண்பாற் பண்புகளையும் குறிக்கும். பிள்ளை,பையன் என்ற சொற்களும் பாவிக்கப்படுகின்றன.
 
ஒரு குறித்த [[தலைமுறை]]யினருக்கு அடுத்த தலைமுறையில் உள்ள எல்லா ஆண் பிள்ளைகளையும், தமிழில், மகன் என்ற உறவுமுறைச் சொல் குறிக்க வல்லது. ஒருவருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளையை மட்டுமன்றி, அவருடைய ஒத்த பால் சகோதரருக்கும், அவரது [[மனைவி]] அல்லது [[கணவன்|கணவனின்]] ஒத்த பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு மகன் முறை என்பது தமிழர் வழக்கம். அவ்வாறான ஆண் பிள்ளை குறித்த நபரின் ''பெறா மகன்'' எனப்படுவான். இவ்வாறே ஒருவருடைய எதிர்ப் பால் சகோதரருக்கும், அவரது மனைவி அல்லது கணவனின் எதிர்ப் பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு "மருமகன்" உறவுமுறை ஆவான். ''பெறா மகன்'' என்பது பெறாமல் மகன் உரவுமுறைஉறவுமுறை கொண்டவன் என்னும் பொருளைத் தருகிறது. ''மருமகன்'' என்பது ''மருவு''. ''மகன்'' என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானதாக இருக்கலாம்.<ref>சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் [http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.10:1:1848.tamillex.723904 மருகன் என்னும் சொல்லுக்கான பதிவு]</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது