கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
http://www.karunakarappillaiyar.com
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 42:
 
===கல்வெட்டுக்கள்===
இக்கோயில் கட்டியவர் யார் என்பது குறித்தோ எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்றோ தெளிவாகக் கூறுவதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், இக்கோயிலில் கிடைத்த [[கருணாகரப் பிள்ளையார் கோயிற் கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]] இரண்டு இதன் பழமைக்குச் சான்றாக அமைகின்றன. யாழ்ப்பாணத்துக் கோயில் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இவை மட்டுமே. பெருமளவுக்குச் சிதைந்த நிலையில் காணப்படும் இந்தக் கல்வெட்டுக்களை கல்வெட்டாய்வாளரான கலாநிதி [[கா. இந்திரபாலா]] ஆய்வு செய்துள்ளார். அவர் அதனைப்பற்றிக் கூறும்போது கோயிலைக் கட்டியவரின் பெயரோ ஆண்டோ தெரியவில்லை யெனக் குறிப்பிட்டுள்ளார்.<ref name="noolaham">[http://www.noolaham.net/project/04/339/339.htm இணுவை அப்பர்], இணுவையூர் கா. செ. நடராசா</ref> எனினும், செ. இராசநாயகம் தனது நூலில் தந்துள்ள குறிப்புக்களையும், கல்வெட்டில் காணப்படும் பிற தகவல்களையும், எழுத்தமைதியையும் சான்றாகக் கொண்டு முதலாவது கல்வெட்டு 1567 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இந்திரபாலா கூறுகின்றார். இது, இக் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானம் ஒன்று பற்றிக் குறிப்பிடுவதால், இக் கோயில் இதற்கு முன்னரே இருந்து வந்தது வெளிப்படை.
 
===பிற்காலம்===