"மினார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

98 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மினார்''' என்பது, [[இஸ்லாமியர்|இஸ்லாமியரின்]] வணக்கத்தலமான [[பள்ளிவாசல்]]களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை பள்ளிவாசலின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் பள்ளிவாசல் கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும்.
 
==பயன்பாடு==
மினார்களின் முக்கிய செயற்பாடு, தொழுகை நேரங்களில் முஸ்லீம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியான உயரமான இடமாகத் தொழிற்படுவதாகும். எனினும் [[ஒலிபெருக்கி]]கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள்மீது பொருத்தப்படுகின்றன. அழைப்பவர் பெரும்பாலும் தொழுகை மண்டபத்திலிருந்தபடியே அழைப்பு விடுப்பார். இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், [[அழகியல்]] அம்சமாகவுமே பயன்படுகின்றன.
 
==தோற்றமும் வளர்ச்சியும்==
ஆரம்பகால [[பள்ளிவாசல்]]கள் மினார்களைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாத்தின் முதல் தொழுகைகள் [[முகம்மது நபி]] அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றது. அக்காலங்களில் வீட்டுக்கூரையில் ஏறி நின்றே தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டது. முதலாவது மினார் முகமது நபியின் காலத்துக்கு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னரே [[துனீசியா|துனீசியப்]] பகுதியில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1746667" இருந்து மீள்விக்கப்பட்டது