ஜூலியோ குளாடிய மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
'''ஜூலியோ குளாடிய மரபு''' (''Julio-Claudian dynasty'') அல்லது '''ஜூலியோ குளோடிய வம்சம்''' என்பது [[உரோமப் பேரரசு|உரோமப் பேரரசின்]] முதல் ஐந்து பேரரசர்களை அல்லது அவர்களது குடும்பத்தைக் குறிக்கிறது. அவர்கள் - [[அகஸ்ட்டஸ்]], [[டைபீரியஸ்]], [[கலிகூலா]], [[குளோடியசு]] மற்றும் [[நீரோ]]. [[முதலாம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் உரோமைப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து கி.பி.68 வரை அவர்கள் ஆட்சி புரிந்தனர். இந்த மரபைத் தோற்றுவித்தவர் முதல் உரோமைப் பேரரசரான அகஸ்ட்டஸ். இறுதிப் பேரரசர் நீரோவின் தற்கொலையுடன் இந்த மரபின் ஆட்சி முடிவுக்கு வந்தது.<ref>''Brill's New Pauly'', "Julio-Claudian emperors"</ref>
 
ஜூலியோ குளாடிய மரபைச் சேர்ந்த எந்த பேரரசருக்குப் பின்னரும் அவரது மகன் பேரரசராக வில்லை. பண்டைய உரோம வரலாற்றாளர்களான டேசிட்டசும் சியூட்டேனியசும், ஜூலியோ குளாடியப் பேரரசர்களை நல்லவிதமாகக் குறிப்பிடவில்லை. உரோம செனேட் அவை மேட்டுக்குடியினரின் கோணத்திலேயே அவர்கள் இருவரும் பேரரசர்களை சித்தரிக்கின்றனர். [[உரோமக் குடியரசு|உரோமக் குடியரசை]] முடிவுக்கு கொண்டு வந்து, உரோமப் பேரரசை உருவாக்கி வளர்த்தது இம்மரபு தான் என்பதாலும், பேரரசர்களின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தங்கள் வரலாற்று நூல்களுக்குப் பரபரப்பு சேர்க்கும் என்பதாலும் இவ்வாறான சித்தரிப்பைச் செய்திருக்கின்றனர்.
 
எடுத்துக்காட்டாக, டேசிட்டசின் பின்வரும் பத்தியினைக் கொள்ளலாம்:
 
:''பழைய உரோம மக்களின் [குடியரசின்] வெற்றிகளும் தோல்விகளும் புகழ்பெற்ற வரலாற்றாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது போலவே அகஸ்டசின் காலத்தைப் பதிவு செய்ய முன் வந்த ஆளுமைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் [பேரரசில்] பெருகிப் போன துதிபாடல் தன்மையால் அவர்கள் [உண்மையை எழுதினால் தங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்து விடுமோ] என்று அஞ்சி விலகிக் கொண்டனர். டைபீரியஸ், கையஸ், குளாடியஸ், நிரோ ஆகியோரது வரலாறுகள் அவர்கள் ஆட்சியிலிருந்த வரை பயத்தின் அடிப்படையில் எழுதப்பட்டன. அவர்கள் இறந்தபின்னால் [அவர்கள் மீதிருந்த] வெறுப்பின் அடிப்படையில் எழுதப்பட்டன. ''<ref>Tacitus, ''Annals'' I.1</ref>
 
 
==மரபின் காலக்கோடு==
<timeline>
ImageSize = width:800 height:60
PlotArea = top: 0 width:790 left:10 bottom:20
 
Colors =
id:pink value:rgb(0.7,0.7,1) # light pink id:pink value:rgb(1,0.7,0.7) # light pink id:green value:rgb(0.7,1,0.7) # light green
id:blue value:rgb(1,1,0.7) # light blue
id:black value:rgb(0.7,1,1) # light black id:black value:rgb(1,0.7,1) # light black id:grey value:gray(0.8) # grey
 
Period = from:-27 till:68
TimeAxis = orientation:horizontal
ScaleMajor = unit:year increment:5 start:-25
ScaleMinor = unit:year increment:1 start:-27
 
BarData=
bar:barre1
 
PlotData=
align:center textcolor:black fontsize:8 mark:(line,black) shift:(0,0)
bar:barre1
from: -27 till: 14 color:pink text:[[அகஸ்ட்டஸ்]]
from: 14 till: 37 color:red text:[[டைபீரியஸ்]]
from: 37 till: 41 color:yellow text:[[கலிகூலா]]
from: 41 till: 54 color:black text:[[குளாடியஸ்]]
from: 54 till: 68 color:white text:[[நீரோ ]]
 
</timeline>
#[[அகஸ்ட்டஸ்]] (27 BC–14 AD)
#[[டைபீரியஸ்]] (14–37)
#[[கலிகூலா]] (37–41)
#[[குளாடியஸ்]] (41–54)
#[[நீரோ ]] (54–68)
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜூலியோ_குளாடிய_மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது