காசி நயினார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''காசி நயினார்''' என்பவன் [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாணத்தில்]] போத்துக்கீசரின் ஆதிக்கம் தொடங்கிய 1560 களில் அந் நாட்டை ஆண்ட அரசன் ஆவான். [[சங்கிலி]] அரசனைத் தொடர்ந்து பட்டத்துக்கு வந்த [[புவிராஜ பண்டாரம்]] என்பவனை அகற்றிவிட்டு யாழ்ப்பாண அரசை இவன் கைப்பற்றிக் கொண்டான். இவன் யாழ்ப்பாணத்து அரச பதவிக்கு வாரிசு உரிமையற்றவன் என்பதனால், இவனை அகற்றுவதற்காக இவன் எதிராளிகள் சிலர், அக்காலத்தில் [[மன்னார்]]த் தீவைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த [[போத்துக்கீசர்|போத்துக்கீசரின்]] தளபதியான ---[தொம் ஜெரமியோ டீ அசவீடோ]என்பவனிடம் முறையிட்டனர். யாழ்ப்பாண அரசியலில் தலையிடுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகக் கருதிய தளபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து காசி நயினாரை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்கித் திரும்பினான். காசி நயினார் [[சிறை]]யில் அடைக்கப்பட்டான். போத்துக்கீசத் தளபதி மன்னாருக்குத் திரும்பியதும், காசி நயினாரின் ஆதரவாளர்கள் புதிய அரசனைக் கொன்று, காசி நயினாரைச் சிறைமீட்டதுடன் அவனை மீண்டும் பதவியில் அமர்த்தினர்.
 
இந் நிகழ்வைக் கேள்வியுற்ற போத்துக்கீசத் தளபதி சினம் கொண்டான். காசி நயினாரைச் [[சூழ்ச்சி]]யால் கொல்ல எண்ணி, அவன் அரண்மனைப் பணியாள் ஒருவனுக்குக் [[கையூட்டு]]க் கொடுத்து அரசன் உண்ணும் உணவில் [[நஞ்சு]] கலந்து அவனைக் கொன்றான்.
"https://ta.wikipedia.org/wiki/காசி_நயினார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது