கிரியோல் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Guadeloupe creole 2010-03-30.JPG|thumb|[[குவாதலூப்பே]] கிரியோல் மொழியில் ஒரு வீதி அறிவிப்பு: ''மெதுவாகச் செல், பிள்ளைகள் இங்கு விளையாடுகிறார்கள்.'']]
'''கிரியோல் மொழி''' (''creole language'') அல்லது வெறுமனே '''கிரியோல்''' என்பது, பல [[மொழி]]களின் கலப்பினால் உருவான உறுதியான ஒரு மொழியைக் குறிக்கும். கிரியோல் மொழிகளின் சொற்கள் அவற்றின் மூல மொழிகளிலிருந்தே பெறப்படினும், பெரும்பாலும் அவற்றில், ஒலி மாற்றங்களும், பொருள் மாற்றங்களும் இருப்பதைக் காணமுடியும். [[இலக்கணம்]] பெருமளவுக்கு மூல மொழிகளின் இயல்புகளைக் கொண்டு இருப்பினும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்படுவதுண்டு.
வரி 8 ⟶ 7:
கிரியோல் மொழிக்கும் அது உருவாவதற்குப் பங்களித்த மூல மொழிகளுக்கும் இடையிலான இலக்கண ஒற்றுமைகளை விட, கிரியோல் மொழிகளுக்கு இடையே கூடிய் இலக்கண ஒற்றுமைகள் இருப்பதாகச் சில மொழியியலாளர்கள் கூறுகின்றனர். எனினும், இவ்வாறான ஒற்றுமையை விளக்குவதற்குப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட [[கோட்பாடு]]கள் எதுவும் கிடையாது. மேலும் கிரியோல்களுக்கே தனித்துவமான இலக்கண அம்சங்களும் எதுவும் இல்லை.
 
இன்று உள்ள பெரும்பாலான கிரியோல் மொழிகள் கடந்த 500 ஆண்டுக் காலப்பகுதியுள் உருவானவை. விரிந்த ஐரோப்பியப் பேரசுகளும், [[அடிமை வணிகம்|அடிமை வணிகமும்]] உண்டாவதற்குக் காரணமான கடல் வல்லரசுகளின் உலகளாவிய விரிவாக்கமும், அவர்களது [[வணிகம்|வணிகமும்]] இதற்குக் காரணமாகும்<ref>''Linguistics,'' ed. Anne E. Baker, Kees Hengeveld, [http://books.google.com/books?id=R8uWDVdRQlYC&pg=PT436 p. 436]</ref>. அதிகாரத் தகுதியற்ற அல்லது சிறுபான்மை மொழிகளைப்போல கிரியோல் மொழிகளும், அவற்றின் மூல மொழிகளின் சிதைவடைந்த வடிவமாக அல்லது அவற்றின் ஒரு [[வட்டார வழக்கு|வட்டார வழக்காகக்]] கருதப்பட்டன. இப்பிழையான கருத்தாக்கம் காரணமாக ஐரோப்பியரின் [[குடியேற்ற நாடு]]களில் உருவான பல கிரியோல் மொழிகள் அழிந்து விட்டன. இருப்பினும் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுவரும் [[அரசியல்]] மற்றும் அறிவுசார் மாற்றங்களினால் வாழும் மொழிகளாக அவற்றின் நிலை மேம்பட்டிருப்பதோடு, [[மொழியியல்]] ஆய்வுகளுக்கான ஒரு விடயமாகவும் இவை ஆகியுள்ளன.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:கிரியோல் மொழிகள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/கிரியோல்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது