இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
 
1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.<ref name="ramaswamy421"/>. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜியின்]] இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, [[மறைமலை அடிகள்]], பாவேந்தர் [[பாரதிதாசன்]] மற்றும் முத்தமிழ் காவலர் [[கி. ஆ. பெ. விசுவநாதம்]] ஆகியோர் [[திருச்சி]]யில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். [[சென்னை]]யில் நீதிக்கட்சியைச் சேர்ந்த [[ஏ. டி. பன்னீர் செல்வம்]], [[பெரியார்|ஈ.வே.ரா பெரியார்]] ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், [[வழக்குரைஞர்]]களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] 21 [[ஏப்ரல்]], 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் [[இந்தி]]யைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, [[திசம்பர்]] 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.<ref name="baliga1">{{cite book | first= B. S. | last=Baliga| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Madras district gazetteers, Volume 10,Part 1|edition= | publisher=Superintendent, Govt. Press| location= | id= | pages=244| url=http://books.google.com/books?id=jBxuAAAAMAAJ}}</ref> சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.<ref name="more"/> 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
 
==பொது மக்கள் கருத்து==
இந்தி கட்டாயப்பாடமாகத் திணிக்கப்பட்ட அப்போதைய காலகட்டத்தில் நாட்டுப்புற மாணவ மாணவியருக்கு ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி மட்டுமே கிடைத்தது. நகர்புறத்திலோ மூன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலமும் சொல்லித்தரப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே கற்று ஐந்தாம் வகுப்பு முடிந்து, நகர்ப்புறத்து உயர்நிலைப் பள்ளிகளில் சேரச்செல்லும் போது மூன்றாம் வகுப்பிலேயே இக்குழந்தைகள் சேர்க்கப்பட்ட சூழ்நிலையும் இருந்துவந்தது.
 
கிராமத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு ஆறாம் வகுப்பு பயிலச் செல்லும் நாட்டுப்புறக் குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பதில் சிரமம் எழும். அதே சமயம் நகர்ப்புறக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில மொழிப் பரிச்சயம் இருப்பதால் கிராமத்துக் குழந்தைகளை விட முன்னேறிச் செல்லும் சூழல் ஏற்படும்.எனவே இந்தி மொழித் திணிப்பு கிராமத்தினரை முன்னேற விடாமல் தடுக்கும் சூழலை ஏற்படுத்துவதாக பொது மக்கள் கருதினர்.
<ref name="student2">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் ;பக்கம் 513-516</ref>
 
===போராட்டத்திற்கு பேராதரவு===