பிளேக் நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

982 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
}}
 
'''பிளேக்''' (''Plague'') குடலிய நுண்ணுயிரி வகையான ''[[எர்சினாஎர்சினியா பெசுட்டிசு|எர்சினாஎர்சினியா பெசுட்டிசால்]]'' ஏற்படும் கொடிய [[நோய்த்தொற்று]] ஆகும். இந்த [[பாக்டீரியா]]வினால் பிளேக் நோய் ஏற்படுகின்றது என்பதை பிரான்சிய-சுவிசு மருத்துவரான [[அலெக்சாண்டர் எர்சின்|அலெக்சாண்டர் எர்சினும்]] [[சப்பான்|சப்பானின்]] [[ஷிபாசாபுரோ கிடசாட்டோ]]வும் 1894இல் [[ஹாங்காங்]]கில் கண்டறிந்து அறிவித்தனர். இந்த நோயைப் பரப்பும் நோய்ப்பரப்பி உயிரினமாக (vector) இறந்த எலிகளின் உடலில் வாழும் உண்ணிகளை அடையாளம் கண்டவர் [[பவுல்-லூயி சைமண்டு]] ஆகும்.
 
சூன் 2007 வரை [[உலக சுகாதார அமைப்பு]]க்கு அறிவிக்கப்பட வேண்டிய மூன்று நோய்களில் ஒன்றாக பிளேக் நோய் இருந்தது; [[வாந்திபேதி]]யும் [[மஞ்சள் காய்ச்சல்|மஞ்சள் காய்ச்சலும்]] மற்ற இரு நோய்களாகும்.<ref>{{cite web|url=http://www.who.int/ihr/ihr_brief_no_2_en.pdf |title=WHO IHR Brief No. 2. Notification and other reporting requirements under the IHR (2005) |format=PDF |date= |accessdate=2014-08-24}}</ref>
 
நுரையீரல் தொற்றால் ஏற்பட்டதா அல்லது அசுத்தம் காரணமாக ஏற்பட்டதா என்பதைப் பொறுத்து பிளேக்நோய் காற்று மூலமாகவோ நேரடித் தொடர்பு மூலமாகவோ சரியாக சமைக்கப்படாத மாசுமிகு உணவாலோ பரவலாம். ஒவ்வொரு நபரின் பாதிக்கப்பட்ட உடற்பகுதியைப் பொறுத்து பிளேக் நோயின் அறிகுறிகள் அமைந்திருக்கும்: [[அரையாப்பு பிளேக்கு]] நிணநீர்க் கணுக்களிலும், [[குருதிநச்சு பிளேக்கு]] குருதி நாளங்களிலும், [[வளியிய பிளேக்கு]] நுரையீரல்களிலும் ஏற்படும். துவக்கத்திலேயே சிகிட்சை அளிக்கப்பட்டால் இது குணமாகக் கூடிய நோய். உலகின் சிலபகுதிகளில் பிளேக்கு இன்னமும் தொற்றுநோயாக உள்ளது.
 
==பெயர்==
நோய் தோன்றுவழி ஆய்வு பயன்பாட்டில் ''"பிளேக்"'' தற்போது ''அரையாப்புகளில்'' [[பாக்டீரியா]]க்களால் ஏற்படும் தொற்றுக்களைக் குறிக்கின்றது; இருப்பினும் முற்காலங்களில் [[உலகம்பரவுநோய்]]களுக்கு பொதுவாக "பிளேக்கு" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பிளேக்கு என்று பெரும்பாலும் "[[அரையாப்பு பிளேக்கு|அரையாப்பு பிளேக்கேக்]]" குறிப்பிடப்பட்டாலும் இது இதன் ஒரு வெளிப்பாடே ஆகும்; மற்ற இரு வகைகளாக [[குருதிநச்சு பிளேக்கு]]ம் [[வளியிய பிளேக்கு]]ம் உள்ளன. இந்த நோய் "கருப்பு பிளேக்கு" என்றும் "[[கறுப்புச் சாவு]]" என்றும் குறிப்பிடப்படுகின்றது.
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1755966" இருந்து மீள்விக்கப்பட்டது