கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 185:
 
சமீப காலங்களில்,கொலம்பஸின் சாதனைகள் பற்றிய பிரச்சாரமும் [[கொலம்பசு நாள்|கொலம்பஸ் தினக்]] கொண்டாட்டங்களும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. [[1992]]ல் கொலம்பஸ் முதல் கடல் பயணம் தொடங்கிய 500வது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் [[2002]]ல், [[வெனிசுலா]] அதிபர் [[குகொ சவெஸ்]] கொலம்பஸ் தினத்தை "உள்நாட்டு எதிர்ப்பு நாள்" என்று பெயர் மாற்றும் தீர்மானத்தில் கையெழுத்திட்டார்.
== நினைவுக் கொண்டாட்டம் ==
[[File:Columbus 1892 Issue-$5.jpg|thumb|<center>~ கிறித்தோபர் கொலம்பசு ~</center><center>ஐ.அ. கொலம்பிய பதிப்பு, 1893.</center>]]
1492இல் கொலம்பசு அமெரிக்காக்களில் வந்திறங்கிய நாள் அக்டோபர் 12 கனடா தவிர்த்த அனைத்து அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியாவிலும் கொண்டாடப்படுகிறது. எசுப்பானியாவில் இது ''பியஸ்டா நாசியோனல் டெ எசுப்பானா யி டியா டெ லா இஸ்பானியட்'' எனக் கொண்டாடப்படுகிறது. பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் இதனை ''டியா டெ லா ராசா'' எனக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் இது [[கொலம்பசு நாள்]] எனவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரின் இரண்டாவது திங்களன்றும் கொண்டாடப்படுகின்றது.
 
1893இல் [[சிக்காகோ]]வில் நடந்த [[உலக கொலம்பியக் கண்காட்சி]]யில் கொலம்பசு வந்திறங்கிய நானூறாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.<ref name="WDL">{{cite web |url = http://www.wdl.org/en/item/11369/ |title = Bird's-Eye View of the World's Columbian Exposition, Chicago, 1893 |website = [[உலக மின்னூலகம்]] |year = 1893 |accessdate = 17 July 2013 }}</ref>ஆறு மாதங்கள் நடந்த இக்கண்காட்சிக்கு 27 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வருகை தந்தனர்.
 
ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையும் இக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு 16 தபால்தலைகள் அடங்கிய [[நினைவுத் தபால்தலை|நினைவு தபால்தலைத்]] தொகுப்பை வெளியிட்டது; இவை கொலம்பசு, அரசி இசபெல்லா, மற்றும் அவரது கடற்பயணங்களின் வெவ்வேறு நிலைகளை குறித்தனவாக இருந்தன. ஒரு சென்ட் மதிப்பிலிருந்து 5 டாலர் மதிப்பில் இவை இருந்தன. இந்த நினைவுத் தபால்தலைகள் மிகவும் புகழ்பெற்று ஏராளமாக விற்கப்பட்டன. ஆறு மாதகாலத்தில் மொத்தமாக இரண்டு பில்லியன் தபால்தலைகள் விற்கப்பட்டன; இதில் இரண்டு சென்ட் மதிப்பிலான "கொலம்பசின் வந்திறங்கல்" தபால்தலை 72% ஆகும்.<ref>Haimann, Alexander T., "2-cent Landing of Columbus", Arago: people, postage & the post, National Postal Museum online, viewed 18 April 2014.</ref>
 
1992இல், 500வது நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டமாக இரண்டாம் முறை இத்தகையத் தபால்தலைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இவை முதல்முறை தபால்தலைகளின் நகலாக இருப்பின்ம் வலது மூலையில் தேதி மட்டும் மாற்றப்பட்டிருந்தன. ஐக்கிய அமெரிக்காவுடன் இத்தாலி, போர்த்துகல் மற்றும் எசுப்பானியாவும் இத்தபால்தலைகளை அந்நாட்டு செலாவணியில் வெளியிட்டன.<ref>"Columbian Exposition Souvenir Sheets", Arago: people, postage & the post, National Postal Museum online, viewed 18 April 2014.</ref>
 
== நூற்பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது