"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,356 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றையாக்கம்)
 
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1963-1978 ஆண்டுக்காலத்தில் திருத்தந்தையாகப் பணியாற்றி உயிர்நீத்த [[திருத்தந்தை ஆறாம் பவுல்]] என்பவருக்கு “அருளாளர் பட்டம்” வழங்கினார்.<ref>[http://www.nytimes.com/2014/10/20/world/europe/pope-francis-beatifies-pope-paul-vi.html ஆறாம் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது]</ref>
 
==இரு இந்தியர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல்==
 
திருத்தந்தை பிரான்சிசு 2014, நவம்பர் 23ஆம் நாள், கிறித்து அரசர் பெருவிழாக் கொண்டாட்டத்தின்போது இந்தியாவின் கேரளத்தைச் சார்ந்தவர்களும் கத்தோலிக்க திருச்சபையின் சீரோ மலபார் வழிபாட்டு முறையினருமான இரு துறவிகளுக்குப் புனிதர் பட்டம் அளித்தார். உரோமையில் வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்த சிறப்புச் சடங்கின்போது வேறு நான்கு இத்தாலியர்களுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
 
புதிதாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்தியர்கள் [[குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா]], [[எவுப்ராசியா எலுவத்திங்கல்]] ஆகியோர். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து, குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உரோமை சென்றிருந்தனர். கேரள அரசும் இந்திய நடுவண் அரசும் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன.<ref>[http://indiatoday.intoday.in/story/indians-declared-saints-vatican-pope-francis-father-kuriakose-elias-chavara-chavara-achen-sister-euphrasia-evuprasiamm/1/403365.html இரு இந்தியர் புனிதர் பட்டம் பெறுதல்]</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1758409" இருந்து மீள்விக்கப்பட்டது