ஓதப் பூட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 2:
 
'''ஓதப் பூட்டல்''' (''Tidal locking''), அல்லது '''ஈர்ப்பு விசைப் பூட்டல்''' (''gravitational locking'') என்பது ஓர் [[விண்வெளிப் பொருள்]] மற்றொரு விண்வெளிப் பொருளைச் சுற்றிவரும்போது [[ஈர்ப்புச் சரிவு|ஈர்ப்புச் சரிவினால்]] விண்வெளிப்பொருளின் ஒரு பக்கம் மட்டுமே மற்றதை நோக்கி இருக்குமாறு அமைவதாகும். இந்த விளைவு '''ஒத்தியங்கு சுழற்சி''' என்றும் குறிப்பிடப்படுகின்றது. காட்டாக, எப்போதும் [[நிலா|நிலவின்]] ஒரே பக்கம் [[புவி]]யை நோக்கி உள்ளது. ஓதப் பூட்டிய பொருள் தனது அச்சில் சுழலும் நேரமும் தனது கூட்டாளிப் பொருளை சுற்றுகின்ற நேரமும் ஒன்றாக உள்ளது. இதனால் ஒரு அரைக்கோளம் நிரந்தரமாக தனது கூட்டாளிப் பொருளை நோக்கி உள்ளது. பொதுவாக பெரிய விண்பொருளுடன் [[துணைக்கோள்]] ஓதப்பூட்டப்படும். பெரிய பொருளை பூட்டுவதற்கு நிறைய நேரமெடுக்கும் என்பதால் இவ்வாறு நிகழ்கிறது. போதுமான நேரம் கொடுக்கப்பட்டால் முடிவில் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று ஓதப்பூட்டப்பட்டிருக்கும். இரண்டுக்குமிடையே உள்ள திண்ம வேறுபாடும் இடைத்தொலைவும் குறைந்திருந்தால் விரைவில் நிகழும். இத்தகைய விளைவினை [[புளூட்டோ]]விற்கும் இதன் துணைக்கோளான [[சரோன் (துணைக்கோள்)|சரோனுக்குமிடையேக்]] காணலாம்.
ஓதப் பூட்டல் நிகழ எத்தனைக் காலமெடுக்கும் என்பதை கணக்கிட இயலும்.<ref> S.J. Peale, Rotation histories of the natural satellites, in J.A. Burns, ed. 1977. ''Planetary satellites''. Tucson: University of Arizona Press, pp. 87–112.</ref>
 
இந்த விளைவு சில செயற்கைக் கோள்களை நிலைப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது.
==மேற்சான்றுகள்==
 
{{Reflist}}
[[பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்]]
[[பகுப்பு:விண்வெளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓதப்_பூட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது