மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 76:
அச்சந்திப்பைத் தொடர்ந்து, 2014, சூன் 8ஆம் நாள் உரோமை நகரில் திருத்தந்தை பிரான்சிசு “உலக அமைதிக்காக இறைவேண்டல் நாள்” ஏற்பாடு செய்தார். அப்போது பாலத்தீன நாட்டு அதிபர் அபு மாசென், இசுரயேல் அதிபர் சீமோன் பேரஸ் ஆகியோர் வத்திக்கான் சென்றனர். மறைமுதுவர் பர்த்தலமேயுவும் அழைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் ஒன்றிணைந்து உலக அமைதிக்காக இறைவேண்டல் செய்தது ஒரு முக்கிய நிகழ்ச்சி.
 
==மறைபணியின் சில கூறுகள்==
==சிறப்புகள்==
 
பொது மறைமுதுவர் என்னும் வகையில் பர்த்தலமேயு உலக அளவில் சிறப்பான பணியாற்றியுள்ளார். கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமை ஆட்சிக்காலத்தில் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்ட கீழை மரபுவழி திருச்சபைகளைக் கட்டியெழுப்பும் பணியில் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். அதற்காக அவர் வெவ்வேறு தேசிய கீழை மரபுவழி சபைத் தலைவர்களோடு தொடர்புகொண்டு அவர்களுக்கிடையே உறவுகளையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் ஈடுபட்டார்.
 
அதுபோலவே, தமக்கு முன்னால் பொது மறைமுதுவர்களாகச் செயல்பட்ட முதலாம் அத்தனாகோராஸ், முதலாம் திமீத்ரியஸ் போன்றோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பர்த்தலமேயு உரோமன் கத்தோலிக்க திருச்சபையோடு நல்லுறவுகள் ஏற்படுத்தவும், கிறித்தவ ஒன்றிப்பை வளர்க்கவும் பாடுபட்டார்.
 
மேலும், யூதம், இசுலாம் போன்ற பிற சமயங்களோடும் நல்லுறவுகள் வளர்க்க அவர் உழைத்தார். <ref>''' Patriarch Bartholomew I: Texts and Speeches (1991-1992)''' (1998) George C. Papademetriou; Journal of Ecumenical Studies 35</ref><ref>Recent Patriarchal Encyclicals on Religious Tolerance and Peaceful Coexistence (2002) George C. Papademetriou Journal of Ecumenical Studies, 39</ref>
 
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் போற்றற்குரியன என்று பல அமைப்புகள் அவரைப் பாராட்டின.<ref name=env/><ref>{{cite web|url=http://www.patriarchate.org/multimedia/video/green-patriarch |title=The Green Patriarch &#124; Ecumenical Patriarchate of Constantinople |publisher=Patriarchate.org |date=29 August 2013 |accessdate=3 September 2013}}</ref><ref>[http://www.nytimes.com/2012/12/04/science/bartholomew-i-of-constantinoples-bold-green-stance.html ''Orthodox Leader Deepens Progressive Stance on Environment''] December 3, 2012 [[New York Times]] regarding [http://www.patriarchate.org/documents/encyclical-of-his-all-holiness-for-the-church-new-year an Encyclical]</ref>
 
மிகப்பெரும்பான்மையாக முசுலிம்கள் வாழ்கின்ற துருக்கி நாட்டில் மிகச் சிறுபான்மையினராக உள்ள கிறித்தவர்களின் உரிமைகள் மீறப்படுவதை அவர் துணிச்சலோடு சுட்டிக்காட்டியுள்ளார்.<ref>{{cite web|url=http://arsiv.sabah.com.tr/2006/11/19/gnd119.html|title=Derin devlet açtırmıyor|accessdate=2007-05-24|language=Turkish}}</ref><ref>[http://edition.cnn.com/2006/WORLD/europe/11/19/turkey.pope.ap/index.html in English]</ref>
 
==திருத்தந்தை பிரான்சிசை சந்தித்தல்==
2014, நவம்பர் மாதம் 28-30 நாள்களில் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி சென்றபோது அவர் மறைமுதுவர் பர்த்தலமேயுவை காண்ஸ்டாண்டிநோபுளில் சந்தித்தார். இருவரும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சமய நல்லிணக்கம் பற்றியும், கிறித்தவ ஒன்றிப்புப் பற்றியும், நடு ஆசியாவில் கிறித்தவர்களும் சிறுபான்மையினரும் துன்புறுத்தப்படுவது பற்றியும் ஒரு கூட்டறிக்கை விடுத்தனர்.<ref>[http://www.news.va/en/news/pope-francis-patriarch-bartholomew-sign-joint-decl சமய நல்லிணக்கம் பற்றி திருத்தந்தை பிரான்சிசும் மறைமுதுவர் பர்த்தலமேயுவும் விடுத்த கூட்டறிக்கை]</ref>
 
{{under construction}}
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/மறைமுதுவர்_முதலாம்_பர்த்தலமேயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது