"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றைப்படுத்தல்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றைப்படுத்தல்)
==துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம்==
2014, நவம்பர் 28-30 நாட்களில் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி நாட்டுக்குச் சென்று எல்லா சமயங்களையும் சார்ந்த மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து, மக்கள் பணியிலும், சமாதானத்தை வளர்ப்பதிலும் ஈடுபட வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.<ref>[http://www.nytimes.com/2014/11/29/world/europe/on-trip-to-turkey-pope-francis-calls-for-dialogue-in-battling-isis.html?_r=0 துருக்கி பயணம்]</ref>
 
==உலகில் அடிமை முறை ஒழிப்பதற்கான அறிக்கை வெளியிடல்==
2014, திசம்பர் 2ஆம் நாள் [[அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்]] கடைப்பிடித்தலை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான் நகரில் உலக சமயத்தலைவர்கள் பலரோடு சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார். உலக சமயத்தலைவர்கள் கத்தோலிக்கம், கீழை மரபுவழி சபை, ஆங்கிலிக்க சபை ஆகிய கிறித்தவ சபைகளையும், யூதம், இசுலாம், இந்து சமயம், பவுத்தம் போன்ற பிற உலக சமயங்களையும் சார்ந்தவர்கள். இந்து சமய சார்பில் “அம்மா” என்று அழைக்கப்படுகின்ற [[அம்ருதானந்தமயி]] கையெழுத்திட்டார்.
 
அந்த அறிக்கையில் பிற சமயத் தலைவர்களோடு சேர்ந்து திருத்தந்தை பிரான்சிசு இவ்வாறு கூறுகிறார்:
 
"...நமது சமயநம்பிக்கையால் தூண்டப்படு, இன்று இங்கே நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முயற்சியை மேற்கொள்ளவும் நடைமுறைச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் இங்கே கூடியிருக்கின்றோம். அதாவது நவீன காலத்தில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்ற அடிமைமுறை என்னும் கொடுமையை வேரறுக்க நாம் வந்துள்ளோம். இன்று எத்தனையோ மில்லியன் ஆண்கள், பெண்கள், சிறார்கள் அடிமைமுறை காரணமாக உடலளவிலும், பொருளாதார அளவிலும், பால்வினை அளவிலும், உளவியல் அளவிலும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு செய்வது அவர்களுடைய மனிதத்தன்மையை மறுக்கும் செயலாகும். மேலும் மக்களை இழிவுபடுத்துவதும் ஆகும்.
 
”எல்லா மனிதர்களும், அவர்கள் ஆணாலும் சரி பெண்ணானாலும் சரி, ஆண்குழந்தையானாலும் சரி பெண்குழந்தையானாலும் சரி, கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளனர். மனிதர்கள் தமக்குள்ளே அன்புடன் உறவாடுகின்ற வேளையில் கடவுள் அங்கே துலங்குகின்ற அன்பும் சுதந்திரச் செயல்பாடும் கடவுளின் உடனிருப்பைக் குறிக்கின்றன. பிறருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, சமத்துவ உணர்வோடும் சகோதரத்துவ மனநிலையோடும் வாழ்ந்து, சுதந்திரமாகத் தன் இறுதிக்கதியை அடையவேண்டும். எல்லா மனிதர்களுக்கும் அடிப்படையான மாண்பு உண்டு என்பதால் இதை அறிகிறோம். எல்லா மனிதரும் சமமான மனித மாண்பு கொண்டவர்கள் என்னும் உண்மையை மதிக்காமல் அவர்களை வேறுபடுத்தி ஒதுக்கிக் கொச்சைப்படுத்துகின்ற போக்கு பெரிய குற்றம் ஆகும், ஏன், ஒரு மாபெரும் பாதகம் ஆகும். எனவே, நாங்கள் எங்கள் ஒவ்வொருவரின் சமய நம்பிக்கையின் அடிப்படையில், மனிதர்களை வணிகப்பொருள்களாக நடத்தல், கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தல், விபச்சாரத்திற்கு உட்படுத்தல், மனித உடலுறுப்புகளை வணிகப்பொருளாக்குதல் போன்ற நவீன அடிமை முறைகள் எல்லாம் மனித குலத்திற்கே எதிரான குற்றங்கள் என்று அறிக்கையிடுகின்றோம்..."<ref>[http://www.news.va/en/news/religious-leaders-gathered-in-the-vatican-for-the நவீன அடிமை முறைகளை ஒழித்தல் பற்றிய அறிக்கை]</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1760969" இருந்து மீள்விக்கப்பட்டது