வி. கனகசபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: + மே, 25, 1855 - பிப், 21, 1906)
சி →‎இளமைக்காலம்: +படிப்பும் , அலுவலும்
வரிசை 3:
 
==இளமைக்காலம்==
இவரது தந்தையார் [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதி]]யில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]], [[மல்லாகம்]] என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்பவர்என்ற தமிழ் தொண்டர் ஆவார். எனினும் கனகசபை [[சென்னை]]யைச் சேர்ந்த கோமளேசுவரன் கோட்டையில் பிறந்து வளர்ந்தார். மிகவும் இளம் வயதிலேயே [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பட்டம் பெற்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே, சிறிது காலம் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பிறகு, அஞ்சல்துறையில் கண்காணிப்பாளராக சேர்ந்து பணிபுரிந்து, உயர் அதிகாரியாக பணிபுரிந்தார்.ர்<ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 260, 261</ref>. சட்டப் படிப்பும் முடித்து [[மதுரை]]யில் வழக்கறிஞராகத் தொழில் பார்த்தார்<ref>[http://jaybeesmuseumtamil.blogspot.com/2011/06/birth-of-tamils-1800-years-ago.html 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' நூலின் பிறப்பு], [[சி. ஜெயபாரதி]]</ref>. பின்னர் உயர் அதிகாரியாக அஞ்சல் அலுவலகத்தில் பதவியில் அமர்ந்தார்<ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 260, 261</ref>.
 
இவர்அஞ்சலகத் துறையில் பணியாற்றிய போது, பல்வேறு ஊர்களுக்கு மாற்றல் பெற்றார். எந்த ஊருக்குச் சென்றாலும், அப்பகுதிகளில் காணப்படும், பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து வைத்திருந்ததுடன் அவற்றைப் படித்து ஆய்வுகளும் செய்து வந்தார். இதனால் சிறந்த தமிழ் அறிவு பெற்றிருந்ததுடன், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் அவருக்கு நல்ல அறிவும் இருந்தது. தமிழின் பெருமையைப் பிற மொழியினரும் அறிந்து கொள்ளும்படி தனது ஆய்வுகளைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் ஆங்கிலத்தில் எழுதினார். சென்னையில் இருந்து வெளிவந்த "[[மதராஸ் ரிவியூ]]" என்னும் ஆங்கில இதழொன்றில் தமிழர் வரலாறு பற்றி தொடர்ச்சியாக இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் தலைப்பில் ஆங்கில நூலாக வெளிவந்தது. இதன் மூலம், தமிழ் வரலாறு குறித்து முதன் முதலில் முறையான காலவரலாற்று ஆய்வை நிகழ்த்தியவர் என்ற பெருமையைக் கனகசபைப்பிள்ளை பெறுகிறார்<ref>சுவெலபில், கமில். 1997. பக். 104</ref>. [[கா. அப்பாத்துரை]]யார் இந்நூலை ''ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்'' என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தார். பிற்காலத்தில், உ. வே. சாமிநாதையரின் பதிப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காகத் தன்னிடம் இருந்த பழம் தமிழ் நூல் ஏடுகளைச் சாமிநாதையருக்குக் கொடுத்து உதவினார்<ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 261</ref>
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._கனகசபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது