"உதுமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,579 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(*விரிவாக்கம்*)
===தேக்கமும் சீர்திருத்தமும் (1566–1827)===
1566க்குப் பிறகு பேரரசு தேக்கநிலையில் வீழ்ச்சியடையத் தொடங்கியதாக இசுடீபன் லீ கூறுகிறார்; இடையிடையே சில காலங்களில் மீளுருவாக்கமும் சீர்திருத்தமும் நிகழ்ந்து வந்தன. இந்த வீழ்ச்சி விரைவு பெற்று 1699இல் மிகத் தாழ்நிலையை அடைந்தது.<ref>Stephen J. Lee, ''Aspects of European History: 1494-1789'' (2nd ed., 1984) p 77</ref> பல வரலாற்றாளர்கள் இக்கூற்றுடன் ஒப்பாதபோதும் பலரும் "மோசமான சுல்தான்கள், திறமையற்ற முதலமைச்சர்கள், வலுவற்ற, கருவிகள் பற்றாதப் படைகள், ஊழல் அலுவலர்கள், பேராசை பிடித்த முதலீட்டாளர்கள், வலுவான எதிரிகள், துரோகமிழைத்த நண்பர்கள்" வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறுகின்றனர்.<ref>Joel Shinder, "Career Line Formation in the Ottoman Bureaucracy, 1648-1750: A New Perspective," ''Journal of the Economic & Social History of the Orient'' (1973) 16#2 pp 217-237; Shindler is a dissenter.</ref> தலைமையின் தோல்வியே முதன்மைக் காரணமாக கூறும் லீ முதல் 1292 முதல் 1566 வரை ஆண்ட பத்து சுல்தான்களில் ஒருவரைத் தவிர அனைவரும் மிகுந்த திறமை உள்ளவர்களாக இருந்தனர் என்கிறார். 1566 முதல் 1703 வரை ஆண்ட 13 சுல்தான்கள், இருவரைத் தவிர, ஈடுபாடின்றியும் திறமையின்றியும் இருந்தனர்.<ref>Lee, ''Aspects of European History: 1494-1789'' (1984) pp 77-84</ref> மிகவும் மையப்படுத்தப்பட்ட அமைப்பில் மைய அரசின் தோல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இதன் நேரடி விளைவாக மாகாண பிரபுக்கள் வலுபெற்று கான்ஸ்டாண்டிநோபிளை தவிர்க்கத் தொடங்கினர். ஐரோப்பிய எதிரிகளும் வலுபெற்று வந்தனர்; உதுமானியப் படைகள் மேம்படுத்தப்படாதிருந்தது.<ref>David Nicolle, ''Armies of the Ottoman Turks 1300-1774'' (Osprey, 1983)</ref><ref>Jonathan Grant, "Rethinking The Ottoman "Decline": Military Technology Diffusion in the Ottoman Empire, Fifteenth to Eighteenth Centuries," ''Journal of World History'' (1999) 10#1 pp 179-201.</ref> இறுதியாக உதுமானியப் பொருளியல் சீர் குலைந்தது; போர் விளைவாக ஏற்பட்ட பணவீக்கம், உலக வணிகத்தின் திசை மாற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தன.<ref>On the economic troubles see Hakan Berument and Asli Gunay 1. "Inflation Dynamics and its Sources in the Ottoman Empire: 1586–1913." ''International Review of Applied Economics'' (2007) 21#2 pp: 207-245. [http://www.econstor.eu/bitstream/10419/83254/1/dp_2004-03.pdf online]</ref>
===வீழ்ச்சியும் நவீனமயமாக்கலும் (1828–1908)===
[[File:Opening ceremony of the First Ottoman Parliament at the Dolmabahce Palace in 1876.jpg|thumb|1876இல் ''தொல்மாபாச்செ அரண்மனை''யில் முதல் உதுமானிய நாடாளுமன்றத்தின் துவக்கம். முதல் அரசமைப்புசார் ஆட்சி இரண்டாண்டுகளே நீடித்தது. முப்பதாண்டுகளுக்குப் பின்னர் 1908இல் [[இளந்துருக்கியர் புரட்சி]]க்கு அடுத்தே அரசமைப்பும் நாடாளுமன்றமும் மீளமைக்கப்பட்டன.]]
 
[[டான்சிமாத்]] காலத்தில் (1839–1876), அரசு மேற்கொண்ட தொடர்ந்த சீர்திருத்தங்களால் படைகள் நவீனப்படுத்தப்பட்டன; வங்கி முறைமை மேம்படுத்தப்பட்டது; தற்பால் சேர்க்கை குற்றமற்றதாக்கப்பட்டது; சமயச் சட்டங்களுக்கு மாற்றாக சமயச்சார்பற்ற சட்டங்கள் உருவாகின.<ref>{{cite web|last=Ishtiaq|first=Hussain|title=The Tanzimat: Secular reforms in the Ottoman Empire|url=http://faith-matters.org/images/stories/fm-publications/the-tanzimat-final-web.pdf|publisher=Faith Matters}}</ref> பழங்கலைஞர்களுக்கு நவீனத் தொழிலகங்கள் கட்டப்பட்டன. உதுமானிய அஞ்சல் அமைச்சகம் அக்டோபர் 23, 1840இல் நிறுவப்பட்டது.<ref name="PTT">{{cite web|url=http://www.ptt.gov.tr/tr/kurumsal/tarihce.html |archiveurl=//web.archive.org/web/20080913233443/http://www.ptt.gov.tr/tr/kurumsal/tarihce.html |archivedate=13 September 2008 |title=PTT Chronology |publisher=PTT Genel Müdürlüğü|language=Turkish|date=13 September 2008 |accessdate=11 February 2013}}</ref><ref name="PTT2">{{cite web|url=http://www.ptt.gov.tr/index.snet?wapp=histor_en&open=1 |title=History of the Turkish Postal Service |publisher=Ptt.gov.tr |accessdate=6 November 2011}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1761494" இருந்து மீள்விக்கப்பட்டது