"உதுமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,237 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
[[டான்சிமாத்]] காலத்தில் (1839–1876), அரசு மேற்கொண்ட தொடர்ந்த சீர்திருத்தங்களால் படைகள் நவீனப்படுத்தப்பட்டன; வங்கி முறைமை மேம்படுத்தப்பட்டது; தற்பால் சேர்க்கை குற்றமற்றதாக்கப்பட்டது; சமயச் சட்டங்களுக்கு மாற்றாக சமயச்சார்பற்ற சட்டங்கள் உருவாகின.<ref>{{cite web|last=Ishtiaq|first=Hussain|title=The Tanzimat: Secular reforms in the Ottoman Empire|url=http://faith-matters.org/images/stories/fm-publications/the-tanzimat-final-web.pdf|publisher=Faith Matters}}</ref> பழங்கலைஞர்களுக்கு நவீனத் தொழிலகங்கள் கட்டப்பட்டன. உதுமானிய அஞ்சல் அமைச்சகம் அக்டோபர் 23, 1840இல் நிறுவப்பட்டது.<ref name="PTT">{{cite web|url=http://www.ptt.gov.tr/tr/kurumsal/tarihce.html |archiveurl=//web.archive.org/web/20080913233443/http://www.ptt.gov.tr/tr/kurumsal/tarihce.html |archivedate=13 September 2008 |title=PTT Chronology |publisher=PTT Genel Müdürlüğü|language=Turkish|date=13 September 2008 |accessdate=11 February 2013}}</ref><ref name="PTT2">{{cite web|url=http://www.ptt.gov.tr/index.snet?wapp=histor_en&open=1 |title=History of the Turkish Postal Service |publisher=Ptt.gov.tr |accessdate=6 November 2011}}</ref>
 
[[சாமுவெல் மோர்சு]]க்கு [[தந்தி]] கண்டுபிடித்ததற்காக 1847இல் ஆக்கவுரிமை வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.istanbulcityguide.com/history/body_mansions_palaces.htm |archiveurl=//web.archive.org/web/20071010112702/http://www.istanbulcityguide.com/history/body_mansions_palaces.htm |archivedate=10 October 2007 |title=Beylerbeyi Palace |publisher=Istanbul City Guide |accessdate=11 February 2013}}{{dead link|date=April 2014}}</ref> இதனையடுத்து முதல் தந்தி தடம் இசுத்தான்புல் - அட்ரியனோப்பிள் - சும்னு இடையே அமைக்கப்பட்டது.<ref name="NTVtarih2">{{cite journal|url=http://www.ntvtarih.com.tr/ |issue=July 2011 |title=Sultan Abdülmecid: İlklerin Padişahı |page=49 |language=Turkish |publisher=NTV Tarih |accessdate=11 February 2013}}</ref>இந்தக் காலத்தின் உச்சமாக அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச்சார் அரசு இரண்டாண்டுகளே நீடித்தது.
 
உயர்கல்வி பெற்றிருந்த பேரரசின் கிறித்தவக் குடிமக்கள், முசுலிம் பெரும்பான்மையை விட பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தனர்; இது முசுலிம்களிடையே மனக்கசப்பை உருவாக்கியது.<ref name="books.google_b">{{cite book|last=Stone|first=Norman|editor=Mark Erickson, Ljubica Erickson|title=Russia War, Peace And Diplomacy: Essays in Honour of John Erickson|url=http://books.google.com/books?id=xM9wQgAACAAJ|accessdate=11 February 2013|year=2005|publisher=Weidenfeld & Nicolson|isbn=978-0-297-84913-1|page=95|chapter=Turkey in the Russian Mirror}}</ref> 1861இல் உதுமானியக் கிறித்தவர்களுக்கு 571 முதல்நிலை மற்றும் 94 இரண்டாம்நிலை பள்ளிகள் இருந்தன; இவற்றில் 140,000 மாணவர்கள் படித்தனர்.<ref name="books.google_b"/><ref name="books.google_b"/> 1911இல் இசுத்தான்புல்லில் இருந்த 654 மொத்த விற்பனை நிறுவனங்களில், கிரேக்க இனத்தவர்களுக்கு 528 உரிமையாக இருந்தன.<ref name="books.google_b"/>
 
[[File:Turkish troops storming Fort Shefketil (cropped).jpg|thumb|left|1853–1856 [[கிரீமியப் போர்|கிரீமியப் போரின்]] போது துருக்கிய துருப்புக்கள் செப்கெடில் கோட்டையை தாக்குதல்.]]
 
== மேற்கோள்கள் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1761499" இருந்து மீள்விக்கப்பட்டது