உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 110:
 
இவ்வாறு சுருங்கிய உதுமானியப் பேரரசில் பால்கனிய முசுலிம்கள் பால்கன் அல்லது அனடோலியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.<ref name="Mann2004">{{cite book|last=Mann|first=Michael|title=The Dark Side of Democracy: Explaining Ethnic Cleansing|url=http://books.google.com/books?id=cGHGPgj1_tIC&pg=PA118|accessdate=11 February 2013|date=1 November 2004|publisher=Cambridge University Press|isbn=978-0-521-53854-1|page=118}}</ref> 1923இல் அனடோலியாவும் கிழக்கு திராசுமே முசுலிம் பகுதிகளாக இருந்தன.<ref>{{cite book|author1=Matthew J. Gibney|author2=Randall A. Hansen|title=Immigration and Asylum: From 1900 to the Present|url=http://books.google.com/books?id=2c6ifbjx2wMC|accessdate=11 February 2013|date=30 June 2005|publisher=ABC-CLIO|isbn=978-1-57607-796-2|page=437|quote=Muslims had been the majority in Anatolia, the Crimea, the Balkans and the Caucasus and a plurality in southern Russia and sections of Romania. Most of these lands were within or contiguous with the Ottoman Empire. By 1923, only Anatolia, eastern Thrace and a section of the south-eastern Caucasus remained to the Muslim land.}}</ref>
===தோல்வியும் கலைப்பும் (1908–1922)===
 
[[File:Young Turk Revolution - Decleration - Armenian Greek Muslim Leaders.png|thumb|left|1908இல் உதுமானிய சமயநீதியரசர்கள் இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தல். புரட்சியால் ஏற்பட்ட குழப்பத்தில் பல்கேரியாவும் (5 அக்டோபர் 1908) பொசுனியாவும் (6 அக்டோபர் 1908) விடுதலை பெற்றன.]]
 
சூலை 3, 1908இல் [[இளந்துருக்கியர் புரட்சி]]க்குப் பிறகு இரண்டாம் முறை அரசியலமைப்புசார் அரசை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றமும் மீளமைக்கப்படும் என சுல்தான் அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அரசியல், படைத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன; இது உதுமானியப் பேரரசு கலைக்கப்பட துவக்கமாகவும் அமைந்தது.
 
குடிமக்களின் சிக்கல்களுக்கிடையே, [[ஆசுத்திரியா-அங்கேரி]] அலுவல்முறையாக 1908இல் [[பொசுனியா எர்செகோவினா]]வை கைப்பற்றியது; ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா [[லிபியா]]வை இழந்தது. பால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தது; இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திரேசு தவிர்த்த [[பால்கன் குடா|பால்கன்]] நிலப்பகுதிகளை இழந்தது. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகர நகரமான எடிர்னேயையும் இழந்தது. சமயக் கலவரங்களுக்கு அஞ்சி ஏறத்தாழ 400,000 முசுலிம்கள் தற்கால துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் [[வாந்திபேதி]] கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர்.<ref>{{Cite journal | place = NL | format = PDF | url = http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archiveurl = //web.archive.org/web/20070716155929/http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archivedate = 16 July 2007 | title = Greek and Turkish refugees and deportees 1912–1924 | page = 1 | publisher = [[Universiteit Leiden]] | ref = harv}}</ref>1821 முதல் 1922 வரை பால்கன் நாடுகளில் நடைபெற்ற முசுலிம் இனவழிப்பில், பல மில்லியன் கொல்லப்பட்டனர்;பலர் வெளியேற்றப்பட்டனர்.<ref name="McCarthy1995">{{cite book|author=Justin McCarthy|title=Death and exile: the ethnic cleansing of Ottoman Muslims, 1821–1922|url=http://books.google.com/books?id=1ZntAAAAMAAJ|accessdate=1 May 2013|year=1995|publisher=Darwin Press|isbn=978-0-87850-094-9}}</ref><ref name="Carmichael2012">{{cite book|author=Cathie Carmichael|title=Ethnic Cleansing in the Balkans: Nationalism and the Destruction of Tradition|url=http://books.google.com/books?id=ybORI4KWwdIC|accessdate=1 May 2013|date=12 November 2012|publisher=Routledge|isbn=978-1-134-47953-5}}<br />"During the period from 1821 to 1922 alone, Justin McCarthy estimates that the ethnic cleansing of Ottoman Muslims led to the death of several million individuals and the expulsion of a similar number."</ref><ref name="Press2010">{{cite book|author=Oxford University Press|title=Islam in the Balkans: Oxford Bibliographies Online Research Guide|url=http://books.google.com/books?id=Kck_-B7MubIC&pg=PA9|accessdate=1 May 2013|date=1 May 2010|publisher=Oxford University Press|isbn=978-0-19-980381-1|pages=9–}}</ref> 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் 15.5 மில்லியன் மக்கள் தற்கால துருக்கியிலும், 4.5 மில்லியன் மக்கள் சிரியா, பாலத்தீனம், யோர்டானிலும், 2.5 மக்கள் ஈராக்கிலுமாக மொத்தம் 28 மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர். தவிர 5.5 மில்லியன் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியாவின் அரவணைப்பில் இருந்தனர்.<ref>{{cite book|author=Şevket Pamuk|editor=Broadberry/Harrison|title=The Economics of World War I|url=http://books.google.com/books?id=rpBbX3kdnhgC&pg=PA112|accessdate=18 February 2013|year=2009|publisher=Cambridge University Press|isbn=978-1-139-44835-2|page=112|chapter=The Ottoman Economy in World War I}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உதுமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது