பீல்ட்ஸ் பதக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஃபீல்ட்ஸ் பதக்கம்''' (''Fields Medal'') நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் தேர்வுசெய்யப்பட்டு அளிக்கப்படும் ஓர் பரிசாகும். இப்பரிசு கணிதத்தின் நோபல் என கருதப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட இரண்டு, மூன்று அல்லது நான்கு கணிதவியலாளர்களுக்கு அளிக்கப்படும் இவ்விருது கனேடியக் கணிதவியலாளரான ஜோன் சாள்ஸ் ஃபீல்ட்ஸ் என்பவரால் 1924 இல் முன்மொழியப்பட்டதாகும். கனடவிலுள்ள டொராண்டோ வில் 1924 இல் பன்னாட்டு கணித காங்கிரஸ் நடந்தது. அந்த காங்கிரஸின் தலைவராக இருந்தவர் ஃபீல்ட்ஸ். காங்கிரஸை நடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் செலவு போக மீதமிருந்ததை கணிதத்தில் உலகம் போற்றும் சாதனை செய்தவருக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக இருக்கட்டும் என்று நன்கொடையாகக் கொடுத்தார். அவர் காலமான பிறகு 1932 இல் ஜூரிக்கில் கூடினபோது பன்னாட்டுக்கணித காங்கிரஸ் அந்நன்கொடையை ஏற்றுக் கொண்டது.
 
முதல் இரண்டு மெடல்கள் 1936 இல் ஆஸ்லோ காங்கிரஸிலும், அதற்குப்பிறகு உலக்ப்போரினால்உலகப்போரினால் தடைபட்டபிறகு, 1950 இலிருந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கொருமுறை பன்னாட்டு காங்கிரஸ் கூடினபோதெல்லாம் சில முறைகள் 2 மெடல்கள், சில முறை 3 மெடல்கள், சில முறை 4 மெடல்கள் வீதம் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் உலகக் கணிதவியலாளர்களெல்லலாம்கணிதவியலாளர்களெல்லாம் சேர்ந்து செயல்பட்டுக் கொடுக்கப்படும் பரிசு இது.
 
2006 இல் ஒவ்வொரு மெடலின் மதிப்பு 15000 கனடா டாலர்கள். ஃபீல்ட்ஸ் மெடல் என்ற பெயரில் கொடுக்கப்பட்டு வந்தாலும் மெடலில் ஃபீல்ட்ஸ் என்ற பெயர் பொறிக்கப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பீல்ட்ஸ்_பதக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது