துருக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பழங்காலம்: *திருத்தம்*
வரிசை 73:
== வரலாறு ==
=== பழங்காலம் ===
இன்றைய துருக்கியின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, [[ஆசியா மைனர்]] என்றும் அழைக்கப்பட்ட, [[அனத்தோலியா|அனத்தோலியக் குடாநாடு]] தொல்பழங் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளுள் ஒன்று. இங்குள்ள புதிய கற்காலக் குடியேற்றங்களான [[சட்டல்ஹோயுக்]], [[சயோனு]], [[நெவாலி கோரி]], [[ஹசிலர்]], [[கோபெக்லி தெபே]], [[மேர்சின்]] என்பன உலகின் மிகப் பழைய குடியேற்றங்களுள் அடங்குவன. [[டிரோய்திராய்]] (Troy) குடியேற்றம் புதிய கற்காலத்தில் தொடங்கி இரும்புக்காலம் வரை தொடர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலத்தில், அனத்தோலியர்கள் [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய]], [[செமிட்டிய மொழிகள்|செமிட்டிய]], [[கார்ட்வெலிய மொழிகள்|கார்ட்வெலிய]] மொழிகளையும், எக்குழுவைச் சேர்ந்தவை என்று தெரியாத வேறு பல மொழிகளையும் பேசி வந்துள்ளனர். அனத்தோலியாவில் இருந்தே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உலகம் முழுதும் பரவியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.
 
இப்பகுதியில் உருவான மிகப் பழைய பேரரசு [[ஹிட்டைட் பேரரசு]] ஆகும். இது கிமு 18 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. பின்னர் இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய [[பிரிஜியர்]]கள் உயர்நிலை அடைந்தனர். இவர்களது அரசு கிமு ஏழாம் நூற்றாண்டளவில் [[சிமேரியர்]]களால் அழிக்கப்பட்டது. பிரிஜியர்களுக்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசுகளை நிறுவியவர்கள் [[லிடியா|லிடியர்களும்]], [[காரியா|காரியர்களும்]], [[லிசியா|லிசியர்களும்]] ஆவர். லிடியர்களும், லிசியர்களும் பேசிய மொழிகள் அடிப்படையில் இந்திய-ஐரோப்பிய மொழிகளே ஆயினும், ஹிட்டைட் மற்றும் ஹெலெனியக் காலங்களுக்கு முன்னரே இம்மொழிகள் பெருமளவு பிற மொழிக் கூறுகளைப் பெற்றுக்கொண்டன.
 
கிமு 1200 அளவில் தொடங்கி அனத்தோலியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் [[எயோலியர்|எயோலியக்]] கிரேக்கர்களும், [[அயோனியர்|அயோனியக்]] கிரேக்கர்களும் குடியேற்றங்களை அமைத்தனர். கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் இப்பகுதி முழுவதையும் பாரசீக [[ஆக்கிமெனிட் பேரரசு]] கைப்பற்றி வைத்திருந்தது. பின்னர் கிமு 334ல் [[பேரரசர் அலெக்சாண்டர்அலெக்சாந்தர்|அலெக்சாண்டரிடம்]] வீழ்ச்சியடைந்தது. இதன் பின்னர் அனத்தோலியா பல சிறிய அரசுகளாகப் பிரிவடைந்தது. [[பித்தினியா]] (Bithynia), [[கப்பாடோசியா]] (Cappadocia), [[பெர்காமும்]] (Pergamum), [[பான்டசு|பொன்டஸ்]] (Pontus) போன்றவை அவற்றுள் சில. இவை அனைத்துமே கிமு முதலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசிடம்]] வீழ்ச்சி கண்டன. கிபி 324ல் இப்பகுதியிலிருந்த பைசன்டியத்தை "[[புதிய ரோம்]]" என்னும் பெயருடன் ரோமப் பேரரசின் தலைநகரம் ஆக்கினான். இது பின்னர் [[கான்ஸ்டண்டினோப்பிள்]] எனப்பட்டது. இதுவே இன்றைய [[இஸ்தான்புல்]] ஆகும். மேற்கத்திய ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது [[பைசன்டியப் பேரரசு|பைசன்டியப் பேரரசின்]] (கிழக்கத்திய ரோமப் பேரரசு) தலைநகரம் ஆனது.
 
=== துருக்கியரும் ஓட்டோமான் பேரரசும் ===
"https://ta.wikipedia.org/wiki/துருக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது