பசுமை விகடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
| circulation_year =
| total_circulation =
| founder = [[S. S. Vasan]]
| founded = 1926
| firstdate = {{start date|2007|1|26|df=y}}
வரிசை 39:
== இதழில் இருப்பவை ==
விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தகுந்த வல்லுநர்கள் மூலம் தீர்த்து வைக்கும் புறா பாண்டி; சின்னச்சின்ன நுட்பங்களை அழகாகச் சொல்லிச்செல்லும் மண்புழு மன்னாரு; பயிர்களைஎப்படி சாகுபடி செய்ய வேண்டும் என அனுபவ விவசாயிகள் மூலமாகவே கற்றுக்கொடுக்கும் மகசூல் கட்டுரைகள்; லாபகரமான கால்நடை வளர்ப்பு முறைகள்; தேனீ வளர்ப்பு முறைகள்; குறைந்தசெலவில் அதிகமான வருமானம் கொடுக்கும் மீன் வளர்ப்பு முறைகள்; விவசாயிகளின் கண்டுபிடிப்புகள்; விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான பசுமைச்சந்தை, நிலத்தடி நீரின் தேவையை வலியுறுத்தும் கட்டுரைகள்: மூலிகைகள் உள்ளிட்ட பாரம்பரியத் தாவரங்கள் பற்றிய கட்டுரைகள்; விவசாயிகளுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்கள்: விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்க்கும் கட்டுரைகள்; மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான கட்டுரைகள்; தமிழகம் முழுவதும் நடக்கும் விவசாயம் சார்ந்த பயிற்சிகள் பற்றிய அறிவிப்புகள்; விவசாயப் பொருளாதாரம் குறித்த கட்டுரைகள்; இயற்கை விவசாயம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள்; ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள்; வீட்டுத் தோட்டங்கள் அமைப்பது குறித்த கட்டுரைகள்; சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வை ஊட்டும் கட்டுரைகள்: தமிழகம் முழுக்க, பசுமை விகடன் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளின் தொகுப்பு உள்ளிட்ட பலவும் இடம் பெறுகின்றன.
 
== வரலாறு ==
பசுமை விகடன் மாதம்தோறும் 10 மற்றும் 25 தேதிகளில் சென்னையிலிருந்து வெளிவருகிறது. முதல் இதழ், 2007\ம் ஆண்டு ஜனவரி மாதம் 26\ம் தேதியன்று, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதற்கான விழா, கோயம்புத்தூரில் விவசாயிகளின் மத்தியில் நடைபெற்றது. உலகெங்கும் இருக்கும் பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தமிழக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்கிற உயரிய நோக்கில், 80 ஆண்டுகால பாரம்பரியமான ஆனந்த விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு.பா. சீனிவாசன், பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார்.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=73825 அர்ப்பணிப்பு விழா]</ref>இன்றைக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கான அடிப்படைக் காரணம், ரசாயனம் மூலம் விளைவிக்கப்படும் பயிர்கள்தான் என்பதால், இயற்கை வழி விவசாயத்தை வலியுறுத்திவரும் பசுமை
விகடன், இதை ஒரு சமுதாயக் கடமையாகச் செய்து வருகிறது. 60 நாட்களில் விளையும் அறுபதாம் குறுவை என்ற நெல் ரகம் அழிந்து போன நிலையில், அதை தேடிக் கண்டுபிடித்து மீட்டெடுக்கும் பணியில் தோள் கொடுத்ததோடு, அந்த விதைகளை விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ததன் பலனாக, இன்றைக்கு பல நூறு ஏக்கர்களில் விளைகிறது அறுபதாம் குறுவை.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=70468 ஆண்டுக்கு ஐந்து போகம்... அள்ளிக் கொடுக்கும் அற்புத ரகம்!]</ref> 70 நாட்களில் விளையும் பூங்கார், வெள்ளத்தால் பாதிக்கப்படாத மடுமுழுங்கி, வறட்சியைத் தாங்கி வளரும் மாப்பிள்ளை சம்பா, சன்ன ரகமான ‘சொர்ணமசூரி’ போன்ற சம்பா ரகங்கள் என கிட்டத்தட்ட 13 பாரம்பரிய ரகங்களை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க, தோள் கொடுத்திருக்கிறது பசுமை விகடன்.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=2012 பசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் !]</ref><ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=70680 பூங்கார் என்றொரு பொக்கிஷம்...!]</ref>
 
{{விகடன் குழுமம்}}
"https://ta.wikipedia.org/wiki/பசுமை_விகடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது