இந்தியக் கடலோரக் காவல்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
 
== வரலாறு ==
 
இந்தியாவின் படை சாராத கடல்வளங்களைப் பாதுகாக்கக் கடலோரப் காவல்படையை உருவாக்க வேண்டுமென [[இந்தியக் கடற்படை]] முன்மொழிந்தது. 1960ம் ஆண்டுகளில் கடல் வழியே பல கடத்தல் பொருட்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வந்தன இவை உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதிக்கும் என சுங்கத்துறை அஞ்சியது. இவற்றைத் தடுக்க சுங்கத்துறை கடற்படையின் உதவியை அடிக்கடி நாடியது. கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி கடத்தல் படகுகளை வழிமறிக்க வேண்டியது. 1971ம் ஆண்டு இந்த சிக்கலைப் பற்றி ஆராய நாக் சவுத்திரி ஆணையம் உருவாக்கப்பட்டது, இதில் கடற்படையும் வான்படையும் பங்குபெற்றன.
 
 
== கடலோர காவல்படையின் பிரிவுகள் ==
 
=== பொதுப்பணி பிரிவு அலுவலர்கள் ===
கடலில் கப்பல்கள் செல்லும் போது அவற்றைக் கட்டளையிட்டு வழிநடத்துபவர்கள் இப்பிரிவு அலுவலகர்கள் ஆவர். கப்பலில் உள்ள பல வகையான ஆயுதங்களையும் உணரிகள் போன்ற கருவிகளையும் கையாள்வது இவர்கள் பொறுப்பில் உள்ளதாகும். கப்பலின் பாதுகாப்பு, கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பு, போர் மற்றும் அமைதிக் காலங்களில் கப்பலைச் செலுத்தும் செலுத்தும் பொறுப்பு போன்றவை இவர்களைச் சார்ந்ததாகும்.
 
=== தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள் ===
 
தற்போதய நவீன கப்பல்களும் வானூர்திகளும் சிறந்த தொழில்நுட்பங்களையும் எந்திரங்களையும் கொண்டுள்ளன. அவற்றை பராமரிப்பதும் தயார்நிலையில் வைத்திருப்பதும் முதன்மையாகும். இப்பிரிவு அலுவர்கள் இவற்றை கவனித்துகொள்வார்கள்.
 
== அமைப்பு ==
கடலோரக் காவல் படை 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் [[மும்பை|மும்பையிலும்]], கிழக்கு மண்டலத்தின் தலைமையிடம் [[சென்னை|சென்னையிலும்]], [[அந்தமான் நிக்கோபர் தீவுகள்|அந்தமான் & நிக்கோபர்]] மண்டலத்தின் தலைமையிடம் [[போர்ட் பிளேர்|போர்ட் பிளேரிலும்]] மற்றும் வட மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் [[காந்திநகர்|காந்திநகரிலும்]] அமைத்துள்ளது. மொத்தம் 5440 பேர் இதில் பணிபுரிகின்றனர். தற்போதைய தலைவரின் பெயர் துணை அட்மிரல் அனில் சோப்ரா. கடலோரக் காவல்படை மொத்தம் 29 கடலோரக்காவல் நிலையங்களையும், 2 வான் தளங்களையும் ([[தமன்]] & சென்னை) , [[கோவா]], [[கொல்கத்தா]], [[போர்ட் பிளேர்]] போன்றவற்றில் வான் வளாகங்களையும் கொண்டுள்ளது.
 
== கப்பல்கள் மற்றும் வானூர்திகள் ==
 
கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல்களில் Indian Coast Guard Ship (ICGS) என்று எழுதப்பட்டிருக்கும்.
 
60,036

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1762905" இருந்து மீள்விக்கப்பட்டது