சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: eo:Krucmilitoj is a featured article
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''சிலுவைப் போர்கள்''' ({{lang-en|Crusades}};) என்பது சமயம் சார்ந்த, [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலத்தின்]] மையப்பகுதியிலிருந்து அதன் முடிவுவரை கத்தோலிக்க [[ஐரோப்பா]] [[முஸ்லிம்]]கள், [[அஞ்ஞானி]]கள், [[திரிபு கொள்கை]]யாளர்கள் மற்றும் திருச்சபையின் [[முழு உறவு ஒன்றிப்பு|முழு உறவு ஒன்றிப்பிலிருந்து]] நீக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக நடத்திய பல தொடர்ச்சியான போர்களைக் குறிக்கும். இப்போர்கள் மைய கிழக்கு (Near East) நாடுகள், [[வடக்கு ஆப்பிரிக்கா]], [[கிழக்கு ஐரோப்பா]] மற்றும் [[வடக்கு ஐரோப்பா]] ஆகிய இடங்களில் நடந்தன. இவை தொடக்கத்தில் இசுலாமியர்களால் கிறித்தவர்களிடமிருந்து கைபற்றப்பட்ட [[எருசலேம்|எருசலேமையும்]], அதில் உள்ள [[திருநாடு|திருநாட்டையும்]], அங்கிருந்த திருத்தளங்களையும் மீட்கும் நோக்கோடு நடைபெற்றாலும், இவை தவிர வேறு பல சமய, பொருளாதார, அரசியல் நோக்கங்களுக்காகவும் நடந்தது.
 
இப்போர்களின் சின்னமாக கிறித்தவ [[சிலுவை]] இருந்ததால், இவை ''சிலுவைப் போர்கள்'' என அழைக்கப்படுகின்றன. [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் அர்பனின்]] அறிவிப்பால் [[எருசலேம்|எருசலேமையும்]] அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்க ஐரோப்பியர்களால் 200 ஆண்டுகாலம் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த சிலுவைப்போர்கள், 1095இல் தான் துவங்கின என்றாலும், இதற்கு முன் பல ஆண்டுகளாக ஐரோப்பிய எல்லைகள் குறித்து நடந்த சிக்கள்களேசிக்கல்களே இதன் மூலகாரணமாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அரேபிய-பைசாண்டிய போர்கள், பைசாண்டிய-செல்யூக் போர்கள் மற்றும் [[பைசாந்தியப் பேரரசு]] [[அனத்தோலியா]]வை இசுலாமிய [[செல்யூக் துருக்கியர்|செல்யூக் துருக்கியருடன்]] 1071இல் நடந்த போரில் இழந்ததும் பெரும் காரணிகளாக பார்க்கப்படுகின்றது. பைசாந்தியப் பேரரசர் முதலாம் அலெக்ஸோசின் வேண்டுகோளுக்கினங்கி [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் அர்பன்]] இப்போர்களை துவக்கி பைசாந்திய பேரரசுக்கு உதவ, ஐரோப்பிய அரசுகளுக்கு அறிவுறித்தினார். [[பெரும் சமயப்பிளவு|பெரும் சமயப்பிளவால்]] பிரிந்த கிறித்தவத்தை ஒன்றிணைக்க இரண்டாம் அர்பன் செய்த முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.<ref name=Nelson40>Nelson ''Byzantine Perspective of the First Crusade'' p. 40</ref> இப்போரில் ஈடுபடுபவர்களுக்கு [[பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)|நிறைவுப்பலகளை]] அளிப்பதாக திருத்தந்தை கட்டளையிட்டார். மேற்கு ஐரோப்பா முழுவதிலிருந்தும் பல கிறித்தவர்கள் இப்போர்களில் பங்கு கொண்டனர்.<ref name=Asbridge1>Asbridge ''Crusades'' p. 1</ref> [[நில மானிய முறைமை]]யின் அடிப்படையில் இப்போர்களின் படைகள் பிரிந்திருந்ததால், இவை ஒரே கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது இப்போரின் தோல்விக்கு காரணியாகும்.
 
[[படிமம்:Saladin and Guy.jpg|thumb|வெற்றி பெற்ற சலாதீனை வர்ணிக்கும் 20ம் நூற்றாண்டு காலச் சித்திரம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது