மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருமயிலைத் தலபுராணம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *உரை திருத்தம்*
வரிசை 52:
}}
 
'''கபாலீசுவரர் கோவில் ''' (Kapaleeshwarar Temple ) [[இந்தியா|இந்திய]] மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை|சென்னையில்]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] அமைந்துள்ள [[சிவன்|சிவனுடைய]] கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் '''கபாலீசுவரர்''' (சுருக்கமாக ''கபாலி'') என்றும் உடனுறை [[பார்வதி|அம்மனின்]] பெயர் '''கற்பகாம்பாள்''' என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் [[பல்லவர்]]களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது{{fact}}. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. [[இந்து]] [[தொன்மவியல்]]படி இங்கு பார்வதி [[மயில்]] உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், [[திருக்குளம்]] முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
 
==வரலாறு==
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் வழமைபழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய [[பல்லவர்]] காலத்தில் [[சைவ சமயம்|சைவசமய]] மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]], மயிலை கபாலீசுவரர் மீது [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் [[போத்துக்கீசர்]] இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
 
இத்தலம் வாயிலார் நாயனார் அவதாரத் தலம்<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 12</ref>
"https://ta.wikipedia.org/wiki/மயிலாப்பூர்_கபாலீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது