மம்மியூர் சிவன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குருவாயூர் கோயில் தகவல்கள்; சேர்க்கப்பட வேண்டிய சிறு குறிப்புகள் குருவாயூர் கோயிலில் உள்ளன
வரிசை 29:
'''மம்மியூர் கோவில்''' (Mammiyoor Temple) அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள ஒரு பரமசிவரை வழிபடும் கோவிலாகும். குருவாயூரப்பனை காணவரும் ஒவ்வொரு பக்தனும், போகும் வழியில் மம்மியூர் சிவன் கோவில் தர்சனம் பெறவேண்டும் என்பதே ஐதீஹமாகும், அப்படி செய்வதால் குருவாயூர் கோவிலுக்கு சென்றதன் முழு புண்ணிய பலமும் அந்த பக்தருக்கு கிடைக்கப்பெறும் என்பதே ஹிந்துக்களின் நம்பிக்கையாகும். கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
 
==குருவாயூர் என்றகோயிலும் பெயர்மம்மியூர் கோயிலும்==
வாயுவின் உதவியோடு பிரகஸ்பதி (குரு) உலகம் முழுவது அலைந்து கிருஷ்ணரின் பாதள அஞ்சன விக்ரகத்தை செய்ய மிகவும் புனிதமான மற்றும் பொருத்தமான தலத்தைத் தேடினார். அப்போது பரசுராமரின் வேண்டுகோள்படி [[கேரளா]] வந்தனர் வாயுவும் குருவும். அப்போது ருத்ர தீர்த்தத்தில் நீருக்குள் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்தார்.அவர் வெளியே வந்து தாம் தவம் செய்து கொண்டிருந்த இடம் மிகப்புனிதமானது என்றும் அங்கே ஆயிரம் ஆண்டுகளாகத் தாம் தவம் செய்து வருதலையும், தாம் ருத்ர கீதையை உபதேசம் செய்த தலமும் அதுவே என்று கூறி, கிருஷ்ணரின் விக்கிரகத்தை அங்கேயே வைக்கலாம் என்று உறுதி செய்து அருளினார். <ref name="book">குருவாயூர் பூலோகவைகுண்டம்; குருவாயூர் தேவஸ்தான வெளியீடு;2003</ref>
தௌம்யர் என்பவர் இந்த விக்ரஹத்தை அவர்களுக்கு வழிபடுவதற்காக அளித்தார். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் த்வரகாவில் ஒரு பெரிய கோவிலை நிர்மாணித்து, இந்த விக்ரஹத்தை அதில் பிரதிஷ்டை செய்தார். அவர் சுவர்க்க ஆரோஹணம் செய்ய விழையும் பொழுது, இறைவனான கிருஷ்ணர் அவரது பக்தரான உதவரிடம், தேவர்களின் குருவாக திகழ்ந்த பிரஹஸ்பதி மற்றும் வாயு தேவரின் (காற்றின் இறைவன்) உதவியுடன் இந்த விகரஹத்தை ஒரு புனிதமான இடத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு ஆணையிட்டார். அவர்கள் இருவரும் (குரு மற்றும் வாயு தேவர்கள்) விக்ரஹத்தை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி வந்தனர் மேலும் ஒரு புனிதமான இடத்தில் அந்த விக்ரஹத்தை நிறுவினார்கள். அதன் விளைவாக அந்த இடத்திற்கு குருவாயூர் என்ற பெயர் கிடைத்தது, மேலும் ஊர் என்பது இடத்தை குறிப்பதாகும். விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்யும் முஹூர்த்த வேளையில் அங்கு இறைவன் பரமசிவர் மற்றும் அவருடைய துணைவியான இறைவி பார்வதி அவர்களும் அங்கே வந்திருந்தனர் மேலும் அங்கே கோவிலில் இட வசதிகளின் பற்றாக்குறையால், சிறிது தூரத்தில் உள்ள மம்மியூரில் குடிகொண்டு, அங்கிருந்தே ஆசிகளை பொழிந்து வருகின்றனர் என்பது இவ்விடத்து ஐதீஹமாகும் மேலும் மம்மியூர் கோவிலை கால்நடையாக பத்தே நிமிடங்களில் குருவாயூர் கோவிலில் இருந்து அடையலாம்.
 
அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு சிவபெருமான் மம்மியூருக்குச் சென்றுவிட்டார். எனவே [[குருவாயூர் கோயில்|குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்கு]] வரும் பக்தர்கள் மம்மியூர் சிவபெருமானையும் வழிபட்டபின்னரே வழிபாடு பூரணமாகின்றது.<ref name="book"/>
 
மம்மியூர் கோவிலை கால்நடையாக பத்தே நிமிடங்களில் குருவாயூர் கோவிலில் இருந்து அடையலாம்.
 
==இடம்==
"https://ta.wikipedia.org/wiki/மம்மியூர்_சிவன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது