ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
|}}
 
'''அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்''' (அக்டோபர் 15,1931இல் பிறந்தார்) பொதுவாக '''டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்''', என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் [[இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்|11 ஆவது]] [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசு தலைவராக]] பணியாற்றிய இந்திய [[அறிவியல் அறிஞர்|அறிவியலாளரும்]] நிர்வாகியும் ஆவார். கலாம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[இராமேஸ்வரம்]] என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள [[புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி|புனித ஜோசப் கல்லூரியில்]] இயற்பியலும் [[சென்னை தொழில்நுட்ப நிறுவனம்|மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்]] விண்வெளி பொறியியலும் படித்தார்.
 
ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் [[பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு|பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும்]] (DRDO) [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும்]], (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் ''இந்திய ஏவுகணை நாயகன்'' என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த [[சக்தி நடவடிக்கை|போக்ரான் - II]] அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், [[ஓமி பாபா|ஹோமி ஜே பாபா]] மற்றும் [[விக்கிரம் சாராபாய்|விக்ரம் சாராபாய்]] அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ஜெ._அப்துல்_கலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது